கோலிவுட்டில் வெளுத்துக்கட்டும் அருந்ததி

'வெளுத்துக்கட்டு'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அருந்ததி. முதல்படத்தில் குடும்ப பாங்காக நடித்தவர், ''நேற்று
இன்று'' படத்தில் படுகிளாமராக நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். தொடர்ந்து சுண்டாட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் அப்படி அவர் நடித்த எந்த படமும் அவருக்கு பெயர் பெற்று தரவில்லை. அதனால் இனி கேரக்டருக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் தான் நடிப்பேன் என்று முடிவெடுத்தார். அதன்படி இப்போது சிபிராஜ் உடன் நாய்கள் ஜாக்கிரதை படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இப்படத்தில் நடிக்க பல நடிகைகள் ஆடிஷனுக்கு வரவழைக்கப்பட்டு இறுதியில் அருந்ததி தேர்வு செய்யப்பட்டார். 

இதுகுறித்து அருந்ததி கூறுகையில், நாய்கள் ஜாக்கிரதை படம் அருமையான சஸ்பென்ஸ் கதை. இனி நான் நடிக்கும் படங்கள் எல்லாம் எனக்கு பெயர் கிடைக்கும் படி பார்த்து கொள்வேன், கண்டிப்பாக இனி நான் தேர்வு செய்யும் படங்கள், கேரக்டர்கள் எல்லாம் அப்படி தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget