ஐ அசராத சாதனை

இதுவரை தமிழ்சினிமாவில் நிகழ்த்தப்பட் பல சாதனைகளை ஐ படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இப்படம்
வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தமிழ்சினிமாக்கள் அதிகபட்சமாக உலக அளவில் 2500 தியேட்டர்களில் மட்டுமே வெளியாகி இருக்கின்றன.

இந்த எண்ணிக்கையை மிஞ்சுகிற அளவுக்கு ஐ படத்தை 20 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடப்போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர். 20 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாக இருப்பதால் இப்படம் பலவித வசூல் சாதனைகளையும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையும் நிலவி வருகிறது. இது ஒருபுறமிருக்க ஏற்கெனவே மிகப்பெரிய சாதனை ஒன்றை சத்தமில்லாமல் நிகழ்த்தியிருக்கிறது ஐ படம். அதாவது தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே டீஸர் ஒன்றை அதிகம் பார்த்தவர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தை பிடித்து ஏற்கெனவே ஐ படம் சாதித்திருக்கிறது. தற்போது 80 லட்சம் பார்வையாளர்களின் எண்ணிக்கை என்ற புதிய மைல்கல்லையும் எட்டியிருக்கிறது. 

இந்தியாவைப் பொறுத்தவரை பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களின் டீஸர், டிரைலர் மட்டுமே இவ்வளவு பெரிய எண்ணிக்கையை சந்தித்துள்ளன. முதன்முறையாக ஒரு தமிழ்ப்படம் இந்த எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறது. ஷங்கரின் ஐ படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பால் இவ்வளவு பெரிய சாதனையை அது நிகழ்த்தியிருக்கிறது. 

இதற்கு முன்பு ரஜினியின் கோச்சடையான் படத்தின் டிரைலர்தான் (46 லட்சத்திற்கும் மேற்பட்டோர்) அதிக ரசிகர்கள் பார்த்த சாதனையை தக்க வைத்திருந்தது. இந்த சாதனையை 15 நாட்களிலேயே முறியடித்த ஐ திரைப்படம் தற்போது 50 நாட்களில் 80 லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்து வியக்க வைத்திருக்கிறது. 

ஐ படம் ரிலீஸ் ஆவதற்குள் அப்படத்தின் டீஸர் 1 கோடி பேரை சென்றடையுமா? பார்க்கலாம்...!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget