தெலுங்குத் திரையுலகில் தற்போது இரண்டு படங்களுக்கு இடையேயான ஆரோக்கியமான போட்டி ஆரம்பமாகியுள்ளது. 'நான் ஈ' படத்தை
இயக்கிய ராஜமௌலி 'பாகுபலி' என்ற சரித்திரப் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படம் ஒரு சரித்திரப் படமாக உருவாகி வருகிறது. தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த குணசேகர் இயக்கத்தில் 'ருத்ரமாதேவி' என்ற மற்றொரு சரித்திரப் படமும் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் அனுஷ்கா, ராணா டகுபதி, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.ஒரே சமயத்தில் இரு வேறு சரித்திரப் படங்கள் தெலுங்குத் திரையுலகில் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படங்களும் தமிழிலும் வெளியாக உள்ளன. இரண்டிலுமே அனுஷ்கா, ராணா போன்ற நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். ஒரு பக்கம் இவை கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் இரு இயக்குனர்களும் அவரவர் பாணியில் படங்களை இயக்கி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன் பிரபாஸ் இடம் பெற்றுள்ள 'மகாபலி' படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டிருந்தார்கள். புஜபல பராக்கிரமத்துடன் பிரபாஸ் உள்ள அந்தப் புகைப்படம் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
இதனிடையே 'ருத்ரமாதேவி' படத்தில் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அல்லு அர்ஜுன் இருக்கும் முதல் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். இரண்டு போஸ்டர்களைப் பற்றியும்தான் இப்போது தெலுங்கு ரசிகர்களிடையே பேச்சு இருந்து வருகிறதாம். இந்த இரண்டு படங்களுமே தெலுங்குத் திரையுலகின் தரத்தை மேலும் உயர்த்தும் என திரையுலகினரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். 'ருத்ரமா தேவி' இன்னும் சில வாரங்களிலும், 'பாகுபலி' அடுத்த வருடத்திலும் வெளியாக உள்ளது.

கருத்துரையிடுக