பாலிவுட்டின் அழகு மற்றும் திறமையான நடிகை கஜோல். முன்னணி நடிகையாக விளங்கிய கஜால், நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்து
கொண்ட பின்னர் சினிமாவிற்கு முழுக்கு போட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் திரைக்கு வருகிறார். ராம் மாதவானி இயக்கும் புதிய படத்தின் மூலம் தான் கஜோல் ரீ என்ட்ரி ஆக இருந்தார். ஆனால் டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில், கஜோல் பங்கேற்க இருப்பதால் அவரால் இந்தப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இருந்தாலும் இப்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் ரீ-மேக்கில் கஜோல் நடிக்க இருக்கிறார். மலையாள சினிமாவில் ரீ-என்ட்ரி ஆன நடிகை மஞ்சு வாரியருக்கு ஹிட்டாக அமைந்த படம் ஹவ் ஓல்டு ஆர் யூ. இப்போது இந்தப்படத்தை இந்தியில் ரீ-மேக் செய்யும் உரிமையை அஜய் தேவ்கான் வாங்க இருக்கிறார். அதில் தனது மனைவியையே நடிக்க வைத்து, மீண்டும் அவருக்கு வெள்ளித்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க எண்ணியிருக்கிறார். இந்தப்படம் பற்றி அஜய், விரைவில் அறிவிப்பார் என தெரிகிறது.

கருத்துரையிடுக