ரீ என்ட்ரி ஆகும் ஆண்டி நடிகைகள்

திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் நடிப்பதற்கு குட்பை சொன்ன நடிகைகளை மீண்டும் மேக்கப்போட வைத்திருக்கிறது ஒரு கதை.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் கதைதான் அது. திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த மஞ்சு வாரியர் ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, அவருக்கு இப்படம் மூலம் மேலும் நல்ல பெயர் கிடைத்தது. 

ஹவ் ஓல்டு ஆர் யூ படம் ஜோதிகா நடிப்பில் தமிழிலும் ரீ-மேக்காகிறது. சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜோதிகா இப்படத்தின் மூலம் தனது செகன்ட் இன்னிங்ஸை தொடங்குகிறார். மஞ்சு வாரியரை போன்று இப்படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரியாகிறார் ஜோதிகா. மலையாள ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸே தமிழிலும் இப்படத்தை இயக்குகிறார். நடிகர் சூர்யாவின் 2டி பட நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. 

தமிழில் ரீமேக் ஆவதை அடுத்து ஹவ் ஓல்டு ஆர் யூ படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகவிருக்கிறது. ஹிந்தியில் இப்படத்தை நடிகர் அஜய் தேவ்கன் தயாரிக்க, அவரது மனைவி கஜோல் நடிக்க இருக்கிறார். அஜய் தேவ்கனை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்பதை தவிர்த்து வந்த கஜோல் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக பாலிவுட்டில் ரீ-எண்ட்ரியாகிறார். இப்படி ஒரே படத்தின் மூலம் மூன்று பிரபல ஹீரோயின்கள் சினிமாவில் ரீ-என்ட்ரியாவது ஆச்சர்யம்தான்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget