மலையாள படத்தில் அறிமுகமானவர் நிக்கி ஹல்ராணி. அதையடுத்து மலையாளம், கன்னட படங்களில் நடித்து வரும் அவரது நடிப்பில் ஒரே
ஆண்டில் இதுவரை 5 படங்கள் வெளியாகி விட்டன. அதையடுத்து தற்போது தமிழ், மலையாளம், கன்னடம் என தலா 2 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதில் தமிழில் 'மிருகம்' ஆதி நடிக்கும், ''யாகவராயினும் நா காக்க'', மியூசிக் டைரக்டர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ''டார்லிங்'' ஆகிய படங்களிலும் தற்போது தனக்கான போர்ஷனை நடித்து முடித்து விட்டார் நிக்கி ஹல்ராணி. இதில் டார்லிங் படம் பிரேம சித்ர கதா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இதையடுத்து தற்போது கேரளாவில் முகாமிட்டு இரண்டு மலையாள படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் அவர்.
இதுவரை அவர் நடித்த படங்கள் மலையாளம், கன்னடத்தில் வெளியாகியிருக்கும் நிலையில், தமிழில் நடித்த இரண்டு படங்களுமே இன்னும் திரைக்கு வராததால், அதற்கான ரிசல்ட் எப்படி அமையப்போகிறதோ என்கிற எதிர்பார்ப்பில் இருந்து வரும் நிக்கி ஹல்ராணி, தன்னுடன் நடித்த ஆதி, ஜி.வி.பிரகாஷ் இரண்டு பேருமே திறமையான நடிகர்கள் என்று மீடியாக்களிடம் கூறி வருகிறார். மேலும், நான் பல படங்களில நடித்து விட்டபோதும், அவர்களிடமிருந்தும் நடிப்பு பற்றிய நிறைய விசயங்களை கற்றுக்கொண்டேன். அதோடு, என்னை புதுவரவு நடிகை என்று பார்க்காமல் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதனால் தமிழ் சினிமாவும், தமிழ் சினிமா ஹீரோக்களும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அதனால் தமிழ் சினிமாவில் நிரந்தரமான நடிகையாக ஆசைப்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார் நிக்கி ஹல்ராணி.

கருத்துரையிடுக