கண்ணுக்குக் கீழே கருவளையமா

கண்ணுக்குக் கீழே கருவளையம் விழுந்து எப்போது பார்த்தாலும் கவலைக்குரிய மனுஷியாகக் காணப்படுகீறிர்களா? உங்கள் கவலைப்
போக்குகிறது உளுத்தம் பருப்பு?

2. துண்டு வெள்ளரிக்காயில், அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து அரையுங்கள். இதை தினமும் கண்களைச் சுற்றிலும் பூசி, 3 நிமிடம் கழித்து அலசுங்கள். வெள்ளரிக்காய், கருவளையத்தைப் போக்கி பளீச் செய்யும். உளுத்தம் பருப்பு கண்களுக்குக் கீழே இருக்கிற தோலின் முரண்டுத்தனத்தைப் போக்கி, தோலை மென்மையாக்கும்.

முகத்தில் சுருக்க வரிகள் தோன்றி கவலைப்படுத்துகிறதா? கவலைப்பட வேண்டாம்.

கசகசா - அரை டீஸ்பூன்,
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
முழு உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்

இவற்றை ரவைபோல் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கஸ்தூரி மஞ்சள் - ஒரு சிட்டிகை கலந்து பேஸ்ட்டாக்குங்கள். வாரம் ஒருமுறை இந்த பேஸ்ட்டால் முகத்தில் 5 நிமிடம் மசாஜ் செய்து வாருங்கள். சுருக்கம் முற்றிலுமாக நீங்கி, முகம் படு இளமையாகிவிடும்.

பலருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் இந்தப் பருக்களுக்கும் பை சொல்லாமல். உளுத்தம் பருப்பின் உதவியுடன்

புதினா சாறு - 1 டீஸ்பூன்,
வறுத்து அரைத்த உளுத்தம் பருப்புபொடி - 1 டீஸ்பூன்
சந்தனம் - கால் டீஸ்பூன்

ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட்டாக்குங்கள். பருக்களின்மேல் இந்த பேஸ்ட்டைப் பூசி, உலர்ந்ததும் கழுவி வாருங்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்துவந்தால் பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்குபோல் ஆகிவிடும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget