பெண்களுக்கு அந்த விசயத்தில் ஆர்வம் குறைவது ஏன்

எந்தப் ஒரு திருமணம் ஆன பெண்ணுக்கும் தாம்பத்தியம் மீது ஆர்வம் இல்லாமல் போகவே போகாது. நிச்சயம் இருக்கத்தான் செய்யும், ஆனால்
ஆண்களைப் போல வெளியில் காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை பார்க்கலாம்.. 

• சில பெண்களுக்கு தாங்கள் அழகாக இல்லை, உடல் அழகு சரியில்லை என்ற விரக்தி இருக்கலாம். இவர்களுக்கும் கூட தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைவாக இருக்குமாம். ஆனால் இப்படிப்பட்ட பெண்கள் மீது அவர்களின் ஆண் துணைகள் அதீத அன்பையும் பொழிந்தால் நிச்சயம் இவர்களுக்கும் தாம்பத்திய ஆர்வம் சிறப்பாக தூண்டப்படுமாம். 

உன்னாலும் என்னை ஆள முடியும், நீயும் செக்ஸியாகத்தான் இருக்கிறாய் என்று அவர்களுக்கு தைரியம் சொல்லி ஊக்கப்படுத்தினாலே போதும் அவர்கள் நிச்சயம் தாம்பத்தியத்தில் சிறந்து விளங்குவார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். 

• சில ஆண்கள் எப்போது பார்த்தாலும் தாம்பத்தியம் நினைப்பிலேயே இருப்பார்கள். தங்களது துணையை தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். இது பெண்களுக்கு அலுத்துப் போய் விடும். நான் என்ன தாம்பத்தியம் மெஷினா என்று விரக்திக்குப் போய் செக்ஸையே வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். 

இப்படிப்பட்டவர்களிடம் மனித நேயத்துடன் பொறுப்புடன், பொறுமையாக நடந்து கொண்டு மனதைக் காயப்படுத்தாமல் மனதையும், காமத்தையும் வெல்ல முயற்சிக்க வேண்டும். 

• இது பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைதான். உறுப்பு வறட்சி, இறுக்கம் காரணமாக உறவின்போது வலி ஏற்படுவது சகஜம்தான். இதனாலும் பலருக்கு தாம்பத்தியம் பிடிக்காமல் போய் விடுகிறதாம். இதுபோன்ற நேரங்களில் உரிய உபாயங்களைக் கையாள வேண்டும். 

மேலும் முரட்டுத்தனமான உறவை தவிர்க்க வேண்டும். இப்படி பெண்கள் சந்திக்கும் தாம்பத்திய பிரச்சினைகள் நிறையவே உள்ளன. ஆனால் பிரச்சினை என்று வந்தால் கூடவே தீர்வும் இருக்கத்தானே செய்யும். அதை நாம் சரியாக உணர்ந்து, புரிந்து தெளிந்து அணுகினால் எல்லாம் சரியாகி, இன்பமும் கைகூடி வரும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget