திரு செயத்தே அப்பசி மூலமே வாஸ்து வோங்கப் பாரே பீட்ம பஞ்சு விரதங்காக்க வேண்டியது கிட்டுமே கடைமுக முடவன் முழுக்கே பாப
சாந்தியுமாக நாக சசி குபேர பூஜை புரிந்தே யின்பமது வெய்தலாமே’’ - என்றார் கோலமாமணி சித்தர். இது ஸ்ரீஜய ஆண்டு என்றே சித்தர்கள் பேசுகின்றனர். ஐப்பசி மூலத்தன்று வாஸ்து பூஜை செய்பவர் பற்பல வீடு, கன்று, ரதம் போன்றவற்றுடன் நெடிது வாழ்வர். பீஷ்ம பஞ்சு விரதமேற்பது நினைப்பதை நடக்க வைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நாக சதுர்த்தசி அன்று லட்சுமி குபேர பூஜை புரிய செல்வம் உண்டாகி லட்சுமி கடாட்சம் மேலோங்கும்.
முடவன் முழக்கு நீராட பாவ, தோஷ, பீடைகளுக்கு பரிகாரமாக அமையும் என்பதாம். தன்வந்த்ரி பூஜை செய்ய ஏற்ற கோள்நிலை அமைந்தது இம்மாதம். அரசர்கள் மேன்மை பெறுவர். குடிகளுக்கு மனமகிழ்ச்சி, ஆனந்தம் கிடைக்கும். சொற்ப மழை கிட்டும். பயிர் தழைக்கும். தானியங்கள் உற்பத்தி கூடும். அண்டை நாட்டு மக்களுடன் உறவு மேம்படும் என்கிறார் கொங்கணச் சித்தர்: ‘‘அண்டை மண்ணிலிருந்து உறவு கூடும் தான்யமொடு கதிரேற்றங் காணுமே மன்னரொடு மக்களுமேன்மை பெறவே சர்வபீடை நிவாரணங் காண மாதவனை தன்வந்த்ரி வடிவை தொழுதுய்வீரே.’’ இனி நாடி சொல்லும் நட்சத்திர பலனை காண்போம்:
கிருத்திகை - உத்திரம் - உத்திராடம்
‘‘உவகை கூடுமே கூடிய நேசத்தால்
நன்மை சேருமே தனத்தொடு தாம்பத்யஞ்
சிறக்க நேத்திராடனச் சோர்வு தட்டுமென்றறி
நந்தி தேவனை வழிபட தனதான்ய
சேர்க்கையொடு மனைவிருத்தி கூடுமென்பது
வெதமொப்ப கண்டேன் சிவனே’’
- பாம்பாட்டிச் சித்தர்
மகிழ்ச்சி, செல்வம், முன்னேற்றம் கூடும். மணவாழ்க்கை இன்பத்தை சேர்க்கும். கண் திருஷ்டி அதிகம் சேரும் என்பதினாலும், கிரக சாந்தி ஏற்பட, நந்தி தேவர் பூஜை புரிவது சிறப்பு. இதனால் தன, தான்யம் சேர்வதுடன் புதிய வீடு, கட்டிடம் போன்றான வாங்க அடியெடுத்து வைக்கவும் நேரிடும் என்பதாம்.
ரோகிணி-அஸ்தம்-திருவோணம்
‘‘பொருள் விரயம் காணும் நூதன கடன்
தொல்லை தருமே அலைச்சலுடனே அக
உளைச் சலுஞ் சேர பூசலுண்டு உறவுடனே
எதையுமே யடக்கி யடங்க சாந்தி பெறலாமே.
வீண் வாதமதனை விடுப்ப யருணபூஜை
புரிந்தே யவமந்திர நாளுமீராறு
அரைப்ப ஜெயமே கண்டு யின்புறலாகுமே’’
- குதம்பைச் சித்தனார்.
பொருள் பற்பல வழிகளில் செலவாகும். கடனால் உள்ளம் கலங்கும். மன உளைச்சலுடன், வீண் அலைச்சலும் உண்டு. மிகுந்த பொறுமை, எச்சரிக்கையுடன் பேச, நடக்க, நன்மை கண்டிப்பாக உண்டு. ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை அதிகாலை வேளை பன்னிரண்டு முறை பாராயணம் செய்து வர இன்பமயமான எதிர்காலம் அமையும் என்பது கருத்து.
மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம்
‘‘உற்ற உறவால் சோகஞ் சேர உறவு
வழி தொல்லையுங் கூடுங் காணீர் தியாகஞ்
செய்தே பழி சேர்க்குங் காலமிது தனித்தே
குலம் பேண மேன்மையென உணரு.
மணி மந்த்ராயண விரயமுண்டாம்.
வழக்கும் வந்தோட சட்டை நாதனை
சரணடைந்தே போற்றிட சகலத்தையுஞ்
செயங் கொள்ளலாமே’’
- சட்டைமுனிச் சித்தர்.
பெரியோர்களால் அல்லது மூத்தவர்களால், உடன் பிறந்தவர்களால், உற்ற உறவினரால் மனச் சங்கடங்கள் சேரும். தியாகத்திற்கு உயர்வேது என வருந்த வேண்டிய நேரம். வைத்திய செலவுங்கூடும். தன் குடும்பம் மட்டும் பேணி சட்டைநாத சிவனைத் தொழுதுவர நல்ல முன்னேற்றம் காணலாம். உறவினர் பாராட்டுமளவு உயரலாம்.
திருவாதிரை - சுவாதி - சதயம்
‘‘சுப விரயங்காணுமே கன்றொடு
ரதமுஞ் சேரவே செழிப்பு கூடுமப்பசியே
தடத்தே கண்டம் வந்தோட வாயுள் பலமுண்டு
கலக்கந் நீக்கி வீண் பழிக்காளாக விழித்திரு
கள்வராலு வுற்றுப்பெற்ற பேராளுமச்சமுண்டு
பயிரவப் பெருமானை வருணநாளத்தமனத்தே
யபிடேகித்தாராத னையாற்றி யல்லலிருந்தே
விடுபட நன்றே’’
- குதம்பைச் சித்தர்.
கல்யாணம் போன்ற சுபவிசேஷங்களால் பொருள் விரயம் காணும். ஆடை, ஆபரணம், வாகனம் போன்றவை சேரும். சாலையில் சில இடையூறுகள் வந்து மறையும். வீண் பழிகள் வரலாம். உறவினர், திருடர் தம்மாலும் மனம் அச்சம் காணும். பைரவ மூர்த்தியை ஞாயிறு தோறும் மாலை வேளையில் அபிஷேகஞ் செய்து ஆராதனை செய்து வர எந்த தொல்லையும் இன்றி இனிதே இன்புற்று வாழலாம்.
புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி
‘‘பட்ட துயரகலுமெனப் பாடு,
பால்யத்து பட்ட துயரகலுமெனப் பாடு,
பாவியர் செய் வஞ்சமெல்லாம் விலகி
நல் வாழ்வு வந்ததெனப் பாடு,
நற்பணி கிட்டியதேயெனப் பாடு,
பட்ட பாடு இனியில்லையெனப் பாடு,
உத்தமிக்கு பதியானோமெனப் பாடு,
அவளிருக்க ஏது வுபத்திரமெனப் பாடு,
அன்னாபிஷேகந்தனை முழுமதி செய்தே நிற்ப
குறையிலாயின்பமேயென வோங்கிப் பாடே’’
- அகப்பேய்ச் சித்தனார்.
இதுவரை பட்ட துயர் அகலும் காலம் வந்தது. நல்ல மனையாள் இருக்க எக்காலமும் இன்பமே என்றறிக. நட்பினர் தம்மாலும் உறவினர் தம்மாலும் பற்பல துன்பங்கள் வந்திருந்தாலும் இனி சுகமாய் ஜீவிக்க இம்மாதம் பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் கலந்து கொண்டு ஆராதிக்க இன்பம் பயக்கும் என்கின்றார் சித்தர்.
பூசம்-அனுஷம்-உத்திரட்டாதி
‘‘பணி மேன்மையுண்டாம் உவப்பான
நூதன பணி தோற்றமுங் கூட்டாய் கூடுமே
வாராத் தனம் வந்தின்பமே கூட்ட குலத்துத்
தாமதமான சுபமும் நடந்தேறப் பாரு வம்பு
வழக்கு ஜெயந் தர பஞ்சாயத்தாருஞ் சாதகஞ்
செயப் பாரு. பிரிந்து போன உறவுந் நட்புஞ்
சேர வறுமுகனாரை யநுதினமுந் தொழுதேத்த
என்ன குறையியம்பு’’
- காகபுஜண்ட சித்தனார்.
பணி மற்றும் செய்யும் வியாபாரம், தொழில் முன்னேற்றங் காணும். கூட்டுப் பணி எதிர்பாராது சேரும். வராத கடன் வந்து இன்பம் கூட்டும். தாமதமான சுப காரியங்கள் இனி வேகமாக நடந்தேறும். நிலுவையான வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமான பலனைத் தரும். கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்த உறவும் நட்பும் கருத்தொருமித்து சேருங்காலமிது. ஆறுமுகப் பெருமானை தினந்தோறும் மனமுருகி தொழுதுவர குறையில்லா பெருவாழ்வு கூடலாகும் என்பதாம்.
ஆயில்யம் - கேட்டை - ரேவதி
‘‘பணி மாற்றமுண்டாமலைச்சலுமதிகரிக்கவே
மேனி தொல்லை கூடும் - தீராப்பீடை
தீரும் நேசமது முன்போலட்டும் கன்னியர்
எண்ணமெலாமீடேறும். நாடு தாண்டியே
பேரின்பமது எய்தலாகுமே. தனக்குறையகலுமன்றி
மேனிக்கு இளைப்பு சேரும் குரு சேர்க்கை
கூடுமே குறையேது செப்பு கேடிலா
பெரும் வாழ்வு வாழவே கருத்தாய்
கணபதியை யருகு கூட்டி தொழுது
வர சாதிக்கலாமே’’
- இடைக்காட்டு சித்தர்.
பணியில் மாற்றம் வரும். சிலருக்கு இட மாற்றமும் உண்டு. அலைச்சல் சற்று கூடும். வாட்டிய பிணி வாட்டம் தரும். கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்த காதலர், தம்பதியர் முன்போல் பாசமுடன் இணைவர். கன்னிப் பெண்கள் இன்பம் அடைவர். பணக் கஷ்டம் சற்று குறையும். கல்வி மேன்மை சிலருக்கு சேரும். விநாயகருக்கு அறுகம்புல் சாத்தி தொழுது வர இன்பம் பயக்கும் என்பதாம்.
அஸ்வினி-மகம்-மூலம்
‘‘மறைந்தே வைரியர் கேடு செய்பவரே
மேனியுஞ் சலிக்குமே அகமது மெத்தவே
நோவப் பாரு. பிற்பகுதி யின்பமென
ஆடையாபரணஞ்சேர தன் நட்பு தன்னால்
தனவரத்து காணுமே நாவடக்கமது நன்மை யாமென வறிந்து திருமகளை சுக்ரவாரமதில் தீபமேற்றித் தொழ
மனைதனில் மிதக்கு மாஸ்தியே’’
- ராமதேவ சித்தர்.
மறைமுகமான சதி வேலைகளில் பொறாமைக்காரர்கள் ஈடுபடுவர். உடலில் சிறு பிணி வந்து வாட்டம் தந்து விலகும். மனசஞ்சலம் கூடி மறையும். மாதப் பிற்பகுதியில் ஆடை, ஆபரணம் சேரும். நல்லோர்கள் நட்பும் உறவும் பணத்தை சேர்க்கும். எதையும் வெளிப்படையாக பேசவேண்டாம். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு பூஜை செய்து வரவும். குறைவில்லா வாழ்வு இன்பமாய் கூடும்.
பரணி - பூரம் - பூராடம்
‘‘தொடுத்த பணி சேருமேயெடுத்த கருமமுஞ்
சாதகமாய் சேருமே பிள்ளை மழலை
தம்மாலானந்தப்பட பட்ட துயரகலப் பாரு
மனைமாட்சியை பெறவே மனைத்தலமுங்
கிட்டுமே மேலோர் நேசங் கூடுமே துயோரால்
முன்னேற்றங்காண கடலது தாண்டியே
நற்சேதி வருமே திருமாலைத் தினமுமேத்த
இம்மையிலே இனிது செயத்தோடே வாழலாமே’’
- அகத்திய முனிவர்.
எந்த காரியத்திலும் வெற்றிதான். குடும்பத்தில் மழலை சத்தம் கேட்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் மனம் குதூகலமடையும். சிலருக்கு வீடுகட்டவும், வாங்கவும் ஒப்பந்தம் ஏற்படும். மனைத்தலம் சிலருக்கு சேரும். நல்லவர்கள் நட்பினால் வழிகாட்டுதலினால் முன்னேற்றம் உண்டு. திருமாலை அனுதினமும் தொழுது வர நன்மையே எந்நாளும் என்பதாம். பொதுவாக ‘‘கருத்தயோதிய துலாந்திங்கள் சயத்தே மாரிக்கு குரைவிலாயாயினுஞ் சொற்பமே அற்பமாய் தனமேற்றம் தான்யவரத்தே கூடுமெனவறி அக்கினி திரவமெல்லாமே ஏற்றங்கான குடிகட்கு குறைவில்லை பாரு’’ - பதஞ்சலி சித்தர். இம்மாதம் சொற்ப மழை பொழியும். பண வீக்கம் அற்பமாகும். தான்ய உற்பத்தி சிறப்பாய் இருக்கும். கச்சா எண்ணெய் எரிபொருள் விலையேற்றம் பெறும். எனினும் குடிமக்கள் செழிப்போடு குறைவின்றி வாழ்வார்கள் என்பதாம்.

கருத்துரையிடுக