சகுணி நாயகி ஜொலிப்பாரா

தமிழில் சகுணி படத்தில் நடித்தவர் ப்ரணிதா. நல்ல அழகும், திறமையும் இருந்து தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனவர். பிசியாக
இல்லாவிட்டாலும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த அத்தரண்டிக்கி தாரேடி படம் ஹிட்டானது. அதில் சமந்தாதான் ஹீரோயின் என்றாலும் ப்ரணிதாவின் கேரக்டரும் பாப்புலர் ஆனது.

அதைத் தொடர்ந்து திரி விக்ரம் படத்தில் சமந்தாவுடன் செண்ட் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஹீரோ அல்லு அர்ஜுன். இயக்குனர் திரிவிக்ரம் கதையில் திடீரென சில மாற்றங்களை செய்தார். பின்பு ஆத் சர்மாவை இன்னொரு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார். உடனே எல்லோரும் ப்ரணீதா மூன்றாவது ஹீரோயின் என்று நினைத்தார்கள்.

சமந்தா, ப்ரணிதா, அல்லு அர்ஜுன் இணைந்து வரும் பல காட்சிகள் படத்தில் இருக்கிறதாம். இதில் அல்லு அர்ஜுன், சமந்தாவைவிட ப்ரணிதா உயரமாக இருக்கிறாராம். இதனை ஹீரோ அல்லு அர்ஜுன் விரும்பாததால் ப்ரணிதா நீக்கப்பட்டு, ஆத் சர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget