சூதுகவ்வும், தெகிடி வெற்றிப் படங்களில் நடித்த அசோக்செல்வன் தற்போது நடிக்கும் படம் ‘சவாலே சமாளி’. இதில் இவருக்கு ஜோடியாக பிந்து மாதவி
நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெகன் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நாசர், ஊர்வசி, சுவாதி, கஞ்சாகருப்பு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
நடிகர் அருண்பாண்டியன் வழங்கும் இப்படத்தை ஏ&பி குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதாபாண்டியன், எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு பி.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி வருகிறார்.
கழுகு, படத்திலிருந்து மாறுபட்டு இந்த படத்தை உருவாக்கி வருகிறார். இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது. படித்த இரண்டு இளைஞர்கள் வாழ்வில் முன்னேற சந்திக்கும் சவால்கள்தான் ‘சவாலே சமாளி’ படத்தின் கதைகரு. சிவாஜிகணேசன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படமான சவாலே சமாளி தலைப்பை இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால் இப்பெயர் சூட்டியதாக இயக்குனர் சத்யசிவா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சிகளை சுவிட்சர்லாந்தில் படமாக்கியுள்ளனர். விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

கருத்துரையிடுக