ஐப்பசி மாத எண் கணித ஜோதிட பலன்கள்

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: நயமாகப் பேசி பலரது நன்மதிப்பையும் பெறும் 1ம் எண் அன்பர்களே, இந்தமாதம் ஆராய்ந்து செய்யும்
காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆயுதங்களைக் கையாளும் போதும், வாகனங் களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழிஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகஸ்தர் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் தம்பதியர் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்லுங்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.

அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6.

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று நெய் விளக்கு ஏற்றி 5 முறை வலம் வரவும். 

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: எண்ணியதை செயல்படுத்தும் 2ம் எண் அன்பர்களே, இந்த மாதம்  மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்கவும், வேளை தவறி உணவு உண்ணும் படியும் நேரலாம். தொழில், வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளைப் பேசாதிருங்கள்.  உத்தியோகஸ்தர்கள் பணிச்சுமையால் சோர்வடையலாம். மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுகளை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் வேண்டாத பிரச்னை தலைதூக்கலாம். உறவினர் யாரிடமும் வீண் சண்டை போடாதீர்கள். பெண்கள் சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். மாணவர்கள் வீண் அலைச்சலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

சிறப்பான கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்.

அனுகூலமான திசைகள்: வடக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட எண்கள்:2, 3, 5.

பரிகாரம்:  திங்கள் தோறும் நெய் விளக்கு ஏற்றி அம்மனை வணங்கி வரவும். 

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: சுய கட்டுப்பாட்டுடன் இருக்கும் 3ம் எண் அன்பர்களே, இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த பணவரவு இருக்கும். உடல், ஆரோக்கியம் பெறும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணும். அதே நேரம், பல தடைகளையும் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமை வெளிப்படும். வரவேண்டிய பணம் வந்து சேரும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். பெண்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாடு கொள்ள வேண்டும். 

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்.

அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 9.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் சிவன் கோயிலில் நெய்தீபம் ஏற்றி 7 முறை வலம் வந்து வணங்கவும்.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:  உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவரும் திறமை உடைய 4ம் எண் அன்பர்களே, இந்தமாதம் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் கைவரும். தொழில், வியாபாரம் லாபமாக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் சேருவார்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் புதிய பொறுப்புகள் சேரும். மேலதிகாரிகள் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் சுபவிசேஷ கொண்டாட்டங்கள் இருக்கும். தம்பதிகளிடையே நெருக்கம் 

அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. பெண்கள் சாமர்த்தியமாகப் பேசி வெற்றி காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.

சிறப்பான கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்.

அனுகூலமான திசைகள்: தெற்கு, தென்மேற்கு.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 9.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசியை அர்ப்பணித்து வணங்கி வரவும். 

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: மற்றவர்களின் கருத்துகளையும் ஏற்றுக் கொள்ளும் 5ம் எண் அன்பர்களே, இந்த மாதம் தடைபட்டிருந்த காரியங்கள் சாதகமாக நிறை வேறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் சிறப்பாக பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உயர் பதவிகளும் கைகூடும். குடும்பத்தில்  சுபவிசேஷங்கள் நடக்கும். கணவன்-மனைவி மனவருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பது ஆறுதலை தரும். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். 

சிறப்பான கிழமைகள்: திங்கள், புதன்.

அனுகூலமான திசைகள்: வடக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி 11 முறை வலம் வந்து வழிபடவும். 

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: அதிக நினைவுத்திறன் கொண்ட 6ம் எண் அன்பர்களே, இந்த மாதம் வீண் முயற்சிகள் வேண்டாம். எதையும் ஆராய்ந்து முடிவெடுங்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத் தடை உருவாகும்.  பழைய பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்ற வேண்டும். புதிய வேலைக்கான முயற்சிகளுக்குப் பலன் கிடைப்பது தாமதமாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் குறையும். பெண்கள் பலமுறை யோசித்து எதிலும் முடிவெடுங்கள். மாணவர்களும் கல்வி விஷயங்களில் தீர ஆலோசித்து செயல்பட வேண்டும். 

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி.

அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மனுக்கு தாழம்பூ, குங்குமம் அர்ப்பணித்து வலம் வரவும்.  

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: தீர்க்கமான எண்ணமுடைய 7ம் எண் அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்தபடி காரிய வெற்றி உண்டாகும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். தொழில், வியாபாரம் சம்பந்தமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணவரத்து நன்றாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுங்கள். பிள்ளைகள் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். பெண்கள் அனுபவபூர்வமான அறிவால் எதையும் சாதிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற தேவையான உதவிகள்கிடைக்கும். 

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்.

அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைதோறும் விநாயகர் கோயிலுக்குச் சென்று அறுகம்புல் மாலை சாத்தி வழிபடவும்.

8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: மற்றவர்களுக்காக போராடும் குணமுடைய 8ம் எண் அன்பர்களே, இந்த மாதம் காரியத்தடை, தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். பொருளாதாரம் உயரும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் பார்ட்னருடன் அனுசரித்து செல்லுங்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் எதற்கும் கவலைப்படாமல் செயலாற்றுங்கள். அலுவலகத்தில் பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் சுபவிசேஷங்கள் நடக்கும். கணவன்-மனைவி அனுசரித்துச் சென்றால் நன்மையே. பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. பெண்கள் பாராட்டு பெறுவீர்கள். மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை விலகும்.

சிறப்பான கிழமைகள்: செவ்வாய், வியாழன், சனி.

அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலில்,  பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வலம் வாருங்கள்.

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற்றம் காணும் 9ம் எண் அன்பர்களே, இந்த மாதம் பலவகைகளிலும் நன்மை உண்டாகும். தெளிவான முடிவுகளால் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். மரியாதையும், அந்தஸ்தும் கூடும். தொழில், வியாபாரத்தில் இருந்த பணத்தட்டுப்பாடு நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களுடன் கருத்து வேற்றுமை குறையும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். பெண்களுக்கு இழுபறிவேலைகள் எல்லாம் சாதகமாகும். மாணவர்கள் தடைகள் விலகி கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். 

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.

அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று செவ்வரளி மாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி 9 முறை வலம் வரவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget