சஞ்சிதா ஷெட்டிக்கு தோழியான லட்சுமிமேனன்

ஜெயம்ரவி-தமன்னா நடித்த தில்லாலங்கடி படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. கன்னட நடிகையான இவர் அதன்பிறகு
மைனா விதார்த் நடித்த கொள்ளைக்காரன் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் வளர்ந்து கொண்டிருந்தபோது அடுத்து பெரிதாக வளருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர், அப்படத்தின் தோல்வி காரணமாக பின்னர் படமே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதனால் மீண்டும் கர்நாடகத்துக்கு சென்று விட்ட சஞ்சிதா ஷெட்டி பின்னர் விஜயசேதுபதி நடித்த சூதுகவ்வும் படத்தில் அவரது கனவு காதலியாக கவர்ச்சிகரமாக நடித்திருந்தார். அதையடுத்து பீட்சா-2 படத்தில் நடித்தார். அதன்பிறகு படம் இல்லாததால் மீண்டும் பெங்களூருக்கே திரும்பி விட்ட சஞ்சிதா, தற்போது புதிய வாய்ப்புகளுக்காகவும் அடிக்கடி சென்னைக்கு விசிட் அடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், அயல்நாடுகளில் நடக்கும் சினிமா விருது விழாக்களுக்கும் அடிக்கடி விசிட் அடித்து வரும் சஞ்சிதா ஷெட்டி, சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற சினிமா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோது எதேச்சையாக நடிகை லட்சுமிமேனனை பார்த்தாராம். இரண்டு பேருக்குமே அதற்கு முன்பு பெரிதாக நெருக்கம் இல்லை என்றபோதும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக்கொண்டு பேசிப் பழகினார்களாம்.

ஒரே நாளில் நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டார்களாம். அதிலிருந்து இருவரும் அடிக்கடி போனில் பேசிக்கொள்வதோடு, சென்னைக்கு வரும்போதும் மீட் பண்ணிக்கொள்கிறார்களாம். இதையடுத்து, சினிமாவில் எனக்கு எத்தனையோ தோழிகள் இருந்தபோதும் லட்சுமிமேனன் பெஸ்ட் ப்ரண்டாகியிருக்கிறார் என்று தெரிவித்துள்ள சஞ்சிதா ஷெட்டிக்கு, தனக்கு தெரிந்த மலையாள டைரக்டர்களிடம் சான்ஸ் வாங்கித்தருவதாகவும் லட்சுமிமேனன் கூறியிருக்கிறாராம். அதனால் இப்படியொரு நல்ல தோழியை எந்த சினிமாவிலும் பார்க்க முடியாது என்கிறார் சஞ்சிதா ஷெட்டி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget