சண்டைக் காட்சிகளில் மிரட்டும் கார்த்திகா

கார்த்திகா யார் என்று சொன்னால் உடனே உங்களுக்கு ஞாபகம் வருமா என்பது சந்தேகம்தான். பாரதிராஜாவின் இயக்கத்தில்
'அன்னக்கொடி'யில் அறிமுகமாகி 'கோ' படத்தில் புகழ் பெற்றவர்தான் கார்த்திகா. அதன் பின் கடந்த சில வருடங்களாக எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்காமலே இருந்தார். சரியான கதை அமையவில்லை என்பதுதான் அதற்கு அவர் சொன்ன காரணம். 'கோ' என்ற மாபெரும் வெற்றிப் படத்தில் அவர் நடித்திருந்தாலும் அவரை யாரும் அணுகவில்லை என்பதுதான் உண்மையான காரணம் என்கிறார்கள் கோலிவுட்டினர். எப்படியோ ஒரு வழியாக 'புறம்போக்கு' படத்தில் தற்போது ஆர்யா, விஜயசேதுபதியுடன் நடித்து வருகிறார் கார்த்திகா.இடையில் தெலுங்கில் 'பிரதர் ஆப் பொம்மலி' என்ற படத்தில் நரேஷின் கூடப் பிறந்த சகோதரியாக நடித்து வருகிறார். அதாவது நரேஷும், கார்த்திகாவும் இரட்டையர்களாகப் பிறந்தவர்கள். தங்கை கதாபாத்திரம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். படமே கார்த்திகாவைச் சுற்றித்தான் நகர்கிறதாம். இந்தப் படத்திற்காக கார்த்திகா ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் கூட டூப் இல்லாமல் நடித்திருக்கிறாராம். இயக்குனர் சொன்னாலும் கேட்காமல் நானே நடிக்கிறேன் என்று நடித்துக் கொடுத்திருக்கிறாராம். நரேஷ் எந்த அளவுக்கு கலகலப்பானவரோ, அதே போல் கார்த்திகாவும் மிகவும் கலகலப்பானவர் என சான்றிதழ் தருகிறார் இயக்குனர். முதலில் அந்தக் கதாபாத்திரத்தில் கார்த்திகாவை நடிக்க வைக்கத் தயங்கியதாகவும், ஆனால் நரேஷ்தான் அந்தக் கதாபாத்திரத்தில் கார்த்திகா நடித்தால் பொருத்தமாக இருப்பார் என்று கூறியதாகவும் இயக்குனர் சொல்கிறார். கார்த்திகாவும் அற்புதமாக நடித்துக் கொடுத்திருக்கிறாராம். இப்படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெற உள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget