iOS 8 ஏற்கும் சாதனங்கள்

ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வழங்கி இருக்கும், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ்.8, கீழ்க்கண்ட சாதனங்களில் ஏற்றுக்
கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் இணையத்திலிருந்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். அதன் மூலம் ஐ.ஓ.எஸ். 8 தரும் புதிய வசதிகள் அனைத்தையும் அனுபவிக்கலாம். அந்த சாதனங்கள் பின்வருமாறு:

ஐபோன்: ஐபோன் 5, ஐபோன் 5 எஸ், ஐபோன் 5 சி, மற்றும் ஐபோன் 4 எஸ்.
ஐபாட் டச்: ஐந்தாவது ஜெனரேஷன் ஐபாட் டச் சாதனங்கள்.

ஐபேட்: ஐபேட் ஏர், ஐபேட் 4 ஆவது ஜெனரேஷன் சாதனம், ஐபேட் 2, ரெடினா டிஸ்பிளே கொண்ட ஐபேட் மினி, ஐபேட் மினி.

முன்பு ஐ.ஓ.எஸ்.7 வெளியிட்ட போது, அது தந்த வசதிகள் அனைத்தும், அனைத்து சாதனங்களிலும் கிடைக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட சில வசதிகள் கிடைக்காமல் இருந்தன. தற்போது ஐ.ஓ.எஸ்.8 வசதிகள் அனைத்தும், அனைத்து சாதனங்களிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உங்களிடம் உள்ள ஆப்பிள் நிறுவன சாதனம், மேலே சொல்லப்பட்ட சாதனங்களின் பட்டியலில் இல்லை என்றால், வருத்தப்பட வேண்டாம். அதில் உள்ள ஐ.ஓ.எஸ். 7 சிஸ்டம் பல வசதிகளைத் தொடர்ந்து தந்து வருகிறது. 

மிகப் பழைய ஐபோன் வைத்திருப்பவர்கள், ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டம் தரும் வசதிகளை அனுபவிக்க விரும்பினால், அவர்கள் புதிய ஐபோன் ஒன்றுக்கு மாற வேண்டியதிருக்கும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget