டெல் வின்யூ 11 ப்ரோ 7000 டேப்லெட்

டெல் நிறுவனம் அதன் டேப்லெட் தொடரில் டெல் வின்யூ 11 ப்ரோ 7000 புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அறிவித்துள்ளது, இதில் சிறப்பம்சமாக இன்டெல்
கோர் எம் ப்ராசசர் கொண்டுள்ளது. இந்த டேப்லெட் நவம்பர் 11ம் தேதி முதல் $ 699.99 விலையில் அமெரிக்காவில் தொடங்கி இருக்கும். 

வின்யூ 11 ப்ரோ 7000 டேப்லெட்டில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8.1 இயங்குகிறது. இதில் 64-பிட் உள்ளது, இந்த டேப்லெட்டில் 1080x1920 பிக்சல்கள் முழு HD தீர்மானம் கொண்ட 10.8 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இது ஒரு 2GHz இரட்டை கோர் இன்டெல் கோர் எம் 5Y10a ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. வின்யூ 11 ப்ரோ 7000 டேப்லெட்டில் 4GB அல்லது 8GB DDR3 ரேம் உள்ளது, தவிர 64GB, 128GB மற்றும் 256GB சேமிப்பு, உள்ளிட்ட சில விருப்பங்களுடன் கிடைக்கும், இது ஒரு மைக்ரோSD கார்டு ஸ்லாட் கொண்டுள்ளது. 

டேப்லெட்டில் 38Whr லி-அயன் பேட்டரி ஆதரவுடன் கிடைக்கிறது, சாதனத்தில் Wi-Fi மட்டும் மற்றும் LTE வகைகளில் இருக்கும். வின்யூ 11 ப்ரோ 7000 டேப்லெட் இணைப்பு விருப்பங்கள் 802.11 ac, Wi-Fi, NFC, ப்ளூடூத் 4.0, USB 3.0, மைக்ரோ HDMI, இன்டெல் WiDi, Miracast, 3G மற்றும் 4G LTE வருகிறது. டெல் வின்யூ 11 ப்ரோ 7000 டேப்லெட்டில் 8 மெகாபிக்சல் பின்புற ஆட்டோஃபோகஸ் கேமரா மற்றும் ஒரு 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது, இரண்டும் 1080p வீடியோ பதிவு செய்யக்கூடியது. கிரையோஸ்கோப், அச்செலேரோமீட்டர், மற்றும் ப்ரொக்ஷிமிட்டி சென்சார் ஆகிய சென்சார்கள் அடங்கும்.

டெல் வின்யூ 11 ப்ரோ 7000 டேப்லெட் அம்சங்கள்:

  • 1080x1920 பிக்சல்கள் முழு HD தீர்மானம் கொண்ட 10.8 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே,
  • 2GHz இரட்டை கோர் இன்டெல் கோர் எம் 5Y10a ப்ராசசர்,
  • 4GB ரேம்,
  • 8 மெகாபிக்சல் பின்புற ஆட்டோஃபோகஸ் கேமரா,
  • 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • 64GB சேமிப்பு,
  • 802.11 ac Wi-Fi,
  • NFC,
  • ப்ளூடூத் 4.0,
  • USB 3.0,
  • மைக்ரோ HDMI,
  • இன்டெல் WiDi,
  • Miracast,
  • 3G,
  • 4G LTE,
  • மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8.1,
  • 38Whr லி-அயன் பேட்டரி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget