ஏரோமொபைல் 3.0 வரிசையில் பறக்கும் கார்கள்

ஏரோமொபைல் 3.0 இப்போது பறக்கும் கார்கள் வரிசையில் புதிதாக அறிமுகமாகி இருக்கிறது. ஆட்டோமொபைல், விமானம் என இரண்டிற்கும்
ஏற்ற மாதிரி இது உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு நொடியில் காரிலிருந்து விமானமாக மாறும்படி இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாதாரண காரை நிறுத்துவதற்கான இடமே இதற்கு போதுமானது. 

இதில் இருவர் பயணிக்கலாம், டிராஃபிக்கில் ஓட்டிச் செல்லாம், மேலும் எந்த விமானதளத்திலும் இதை விமானமாகவும் பயன்படுத்தலாம். இந்த விமானம் தரையிறங்குவதற்கு சில நூறு மீட்டர்கள் நீளம் கொண்ட புல்பாதையோ அல்லது நடைபாதையோ போதுமானது. யின் இதற்கு முந்தைய வெர்ஷனான ஏரோ மொபைல் 2.5யை விட ஏரோமொபைல் 3.0 மேம்பட்டிருக்கிறது. 
பல கோண இறக்கைகள் என்ற வசதி இருப்பதால் கரடுமுரடான நிலப்பரப்பிலும் ஏரோமொபைலைத் தரையிறக்கலாம். அக்டோபர் மாதத்தில் இருந்து ஏரோமொபைல் 3.0 சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் இணைக்கப்பட்டிருக்கும் ஏவியானிக்ஸ் கருவி, ஆட்டோ பைலட், பாராசூட் அமைப்பு ஆகியவை கூடுதல் சிறப்புகளாகக் கூறப்படுகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget