7 கப் கேக்ஸ்

தேவையான பொருட்கள்

கடலை மாவு, தேங்காய்த் துருவல்,
பால் - தலா ஒரு கப், 
சர்க்கரைத்தூள் - 4 கப், 
ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன், 

தூளாக்கப்பட்ட முந்திரி - தேவைக்கேற்ப.

செய்முறை

அகலமான பாத்திரத்தில் கடலை மாவை வாசம் வரும்வரை வறுத்தெடுக்கவும். தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். மீண்டும் வேறொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்தவுடன் மாவைப் போட்டு கொஞ்ச நேரம் வதக்கியபின் பாலைச் சேர்த்துக் கிளறவும். நன்கு கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே சர்க்கரையை சேர்க்கவும். பிறகு தூளாக்கப்பட்ட முந்திரி, ஏலக்காய்தூள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றையும் சேர்த்து கலக்கவும். அடுப்பை சீக்கிரமே நிறுத்திவிட்டால் அல்வா பதத்தில் இருக்கும். அதிகமாக சூடேற்றினால் கடினமாகிவிடும். எனவே, தகுந்த பதத்தில் இறக்கி தட்டில் கொட்டி ஆறவிடவும். இதன்மீது நெய் தடவி, துண்டுகளாக வெட்டி, கப்புகளில் அடைத்து வைத்துக்கொள்ளலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget