மைதா கேக்

தேவையான பொருட்கள்

மைதா மாவு - 1 கப், 
பால் - 1 லிட்டர், 
சர்க்கரை - 3 கப், 
நெய் - 3/4 கப், 
ஏலக்காய் - சிறிதளவு, 
முந்திரி அல்லது செர்ரி - அலங்கரிக்க. 


செய்முறை

பாலை சுண்டக் காய்ச்சி கோவா பதத்தில் எடுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி லேசாக காய்ந்ததும் மைதா மாவைப் போட்டு  வறுக்கவும். கீழே இறக்கி ஆறவிடவும். இத்துடன் கிளறிய கோவாவை கட்டியில்லாமல் உதிர்த்து கலந்து வைக்கவும். வேறொரு பாத்திரத்தில்  சர்க்கரை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். இரட்டை கம்பி பதம் வந்தவுடன் அதில் மைதா கலவை, ஏலக்காய் தூள்  தூவி இரண்டு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும். இப்போது பாத்திரத்தை கிழே இறக்கி சிறிது நேரம் கிளறிக் கொண்டே இருக்கவும். சிறிது நெய்  சேர்த்துக் கிளறி, ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி பரவலாக்கவும். பிறகு துண்டுகள் போடவும். முந்திரி அல்லது செர்ரியால் அலங்கரிக்கவும்.  
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget