மீண்டும் ஜொலிப்பாரா சம்யுக்த வர்மா

மலையாளத் திரையுலகில் 90களின் இறுதியில் நடிகையாக அறிமுகமாகி வெறும் மூன்று வருடங்கள் மட்டுமே திரையுலகத்தில் இருந்தவர்
சம்யுக்த வர்மா. குறுகிய காலத்திலேயே பல நல்ல படங்களில் நடித்து புகழ் பெற்றார். கேரள மாநிலத்தில் உள்ள நெடும்புரம் மன்னர் வம்சத்தைச் சேர்ந்தவர் சம்யுக்த வர்மா. தமிழில் சரத்குமார், நெப்போலியன், தேவயானி நடித்த 'தென்காசிப் பட்டிணம்' படம் மூலம் அறிமுகமானார். ஆனால், அதன் பின் தமிழில் எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. மலையாள நடிகரான பிஜு மேனனைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகத்தை விட்டு விலகினார்.

தற்போது மலையாளத் திரையுலகில் சினிமாவை விட்டு விலகிய நடிகைகள் மீண்டும் நடிக்க வருவது ஃபேஷனாகிவிட்டது. மலையாள நடிகையான மஞ்சு வாரியார் கணவரும், நடிகருமான திலீப்பை விட்டுப் பிரிந்து 'ஹௌ ஓல்ட் ஆர் யு' என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகி நல்ல வெற்றியைப் பெற்று விட்டார். இப்போது திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலான பலருக்கும் மீண்டும் நடிக்கும் ஆசை வந்துவிட்டது. அந்த வரிசையில் சம்யுக்த வர்மாவும் இடம் பிடித்து விட்டார். சமீபத்திய பேட்டி ஒன்றில் சம்யுக்த வர்மாவின் கணவரான பிஜு மேனன், சம்யுக்த வர்மாவிற்கும் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தாராளமாக நடிக்க சம்மதிப்பேன் என்று கூறியிருந்தார். அவரின் வருகையை மலையாளத் திரையுலகம் ஆவலுடன் வரவேற்கக் காத்திருக்கிறதாம். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget