மீண்டும் கலக்க வரும் விமலா ராமன்

பொய் படத்தில் கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை விமலா ராமன், அந்த படம் தோல்வி அடைந்ததால் தமிழில்
வாய்ப்பில்லாமல் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெரிய இடைவெளிக்கு பிறகு ராமன் தேடிய சீதையில் நடித்தார். அதற்கு பிறகு விமலா ராமனை தேட வேண்டியதாகிவிட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி வரைக்கும் சென்றவர் கடைசி வரைக்கும் தமிழ் பக்கம் திரும்பவே இல்லை.

தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு ராஜா ராஜேந்திரா என்ற கன்னடப் படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். முன்பை விட உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியிருக்கிறார். ஒரு தமிழ் படத்தில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடக்கிறது. விரைவில் அறிவிப்பு வரும் என்கிறார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget