இந்திய இணைய வேகம் பற்றி தெரியுமா

இந்தியப் பிரதமரின் அலுவலகத்தில் இயங்கும் இணையத்தின் வேகம் நொடிக்கு 34 மெகா பைட்ஸ் ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான இணைய வேகம் சராசரி 2 மெகா பைட்ஸ் தான். பிரதமரின் அலுவலகம் எப்போதும், நம் நாடு மட்டுமின்றி, அனைத்து நாடுகளுடனும் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்று அனுப்ப வேண்டியதிருப்பதால் இந்த அளவு வேகத்தில் இணைய இணைப்பு தரப்பட்டுள்ளது. மத்திய அரசின் நேஷனல் இன்பர்மேடிக்ஸ் செண்டர் (NIC - National Informatics Centre) இதனை அமைத்து வழங்கி வருகிறது. அமெரிக்காவில், கூகுள் பைபர் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு, விநாடிக்கு ஒரு கிகா பைட்ஸ் வேகத்தில் இணையத் தொடர்பு கிடைத்திடுகையில், இது சாதாரணம் தான் என, இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவலைப் பெற்றவர் அறிவித்துள்ளார். 

இந்தியாவில் அதிக வேக இணைய இணைப்பு பெறும் இடம் கொச்சியில் உள்ள Startup Village ஆகும். இது பிரதமரின் அலுவலகம் பெறும் வேகத்தைக் காட்டிலும் 30 மடங்கு அதிகமாகும். இணைய இணைப்பு வழங்குவதில், இந்தியா 115 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. தென் கொரியாவில் தான், மிக அதிக வேகமான, 24.6 மெகா பைட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பு வழங்கப்படுகிறது. 

இந்தியாவில் சில வேளைகளில் உயரும் இணைய சராசரி வேகம் 14 மெகா பைட்ஸ் ஆகும். இதனை இந்திய இணைய பயனாளர்களில் 1.2 சதவீத மக்கள் மட்டுமே பெற்று வருகின்றனர். 

அண்மையில் பிரதமர் அறிவித்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், வரும் 2019 ஆம் ஆண்டுக்குள், இந்திய கிராமங்கள் உட்பட அனைத்து இடங்களுக்கும், அதிவேக இணைய இணைப்பு வழங்கப்படும். இதற்கென மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 

பிரதமரின் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகின்றன. 

கடந்த ஆண்டுகளில், பிரதமர் அலுவலகத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களில், எத்தனை கம்ப்யூட்டர்கள், ஹேக்கர்களால் கைப்பற்றப் பட்டன என்பதற்கு, பதில் தரப்படவில்லை.

பிரதமரின் அலுவலக ரீதியான ட்விட்டர் தளத்திற்கென அரசு எதுவும் செலவழிக்கவில்லை. இதனை 30 லட்சம் பேர் கவனித்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget