எக்லெஸ்  பிக்னிக்  கேக்

தேவையான பொருட்கள்

மைதா - 2 கப், 
மில்க் மெய்ட் - 1 டின், 
வெண்ணெய் - 1 1/4 கப், 
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன், 
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன், 

சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்,  பொடித்த முந்திரி - 1/2 கப், 
முழு முந்திரி - 10, 
முந்திரி, உப்பு - 1 சிட்டிகை, 
Feni அல்லது முந்திரிப்பழச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை

மைதா, சமையல் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும். வாய் அகன்ற பாத்திரத்தில் வெண்ணெய், மில்க் மெய்ட் சேர்த்து நன்கு கலக்கவும்  (ஒரே பக்கமாக க்ரீம் ஆகும் வரை). பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக மைதாவை சேர்க்கவும். இதை ஒரே பக்கமாக மரக்கரண்டியால் கலக்க வும். பின்  பொடித்த 1/2 கப் முந்திரித் துண்டுகளை சிறிது மாவுடன் புரட்டி தனியாக வைக்கவும். இப்போது மைதா மாவில் முந்திரிப்பழச் சாறையும் எசென்ஸையும் சேர்க் கவும். ஒரு கேக் டின்னை சுத்தம் செய்து வெண்ணெய் தடவி, அதில் சிறிது மைதாவை டஸ்ட் செய்யவும். 

எல்லா பக்கமும் மாவு படும்படி செய்ய வேண்டும். டின்னைத் திருப்பிப் போட்டு தட்டி, மீண்டும் திருப்பி கேக் கலவையில் தனியாக புரட்டி வைத்த முந்திரியை மெதுவாக மாவில் கலந்து கேக் டின்னில் ஊற்றி, தட்டி அதன் மேல் முழு முந்திரிப் பருப்பை அலங்கரித்து மைக்ரோவேவ் அவனில் பேக் செய்யவும்.  Feni என்பது முந்திரிப் பழத்தில் செய்யக் கூடிய Wine. இதைக் கொண்டு கேக் செய்வார்கள். Feni விரும்பாதவர்கள் முந்திரிப் பழச்சாறில் செய்யலாம். அதுவும் வேண்டாம் என்றால் முந்திரிப் பருப்பு கொண்டு செய்யலாம். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget