எபோலா வைரஸ் எதிர்ப்பில் ஸ்மார்ட்போன்கள்

உலகை அச்சுறுத்தி வரும் எபோலா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தன் பங்காக, சாம்சங் நிறுவனம் பத்து லட்சம் டாலர் மதிப்புள்ள ஸ்மார்ட்
போன்களை நன்கொடையாக வழங்கி வருகிறது. இவை கினியா, லைபீரியா மற்றும் சியாரா லியோனே ஆகிய நாடுகளில் இயங்கும் 60 எபோலா மருத்துவ மையங்களுக்கு வழங்கப்படும்.

இந்த வகையில், 3,000 காலக்ஸி எஸ்3 நியோ ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட இருக்கின்றன. இவை ஐக்கியா நாடுகள் சபை வழியாக வழங்கப்படும். மேலே சொல்லப்பட்ட நாடுகளில், எபோலா வைரஸ் ஏறத்தாழ 9,200 பேரைத் தாக்கியுள்ளது. ஏற்கனவே, 4,500 பேர் இறந்துள்ளனர். இந்த நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளனர். 

சென்ற வாரம், பேஸ்புக் நிறுவனர் மார்க் அவருடைய மனைவி பிரிசில்லாவுடன் இணைந்து, எபோலாவிற்கு எதிரான போராட்டத்தில் உதவ, 2.5 கோடி டாலர் நன்கொடை வழங்கினார். எபோலா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலே குறிப்பிட்டுள்ள போன்கள், மூன்று நாடுகளில் உள்ள மருத்துவமனைகளை அடைந்தவுடன், அவற்றில் UN's Smart Health Pro என்னும் அப்ளிகேஷன் பதியப்படும். இந்த அப்ளிகேஷன், மருத்துவ மையத்தில் செயல்படும் ஊழியர்களுக்கு, எபோலா வைரஸ் பாதித்தவர்களுக்கு வழங்க வேண்டிய மருத்துவ சிகிச்சை முறை குறித்து தகவல்களைத் தரும். அத்துடன், நோயாளிகள் குறித்த தகவல்களைச் சேர்க்கவும் பயன்படுத்தப்படும். நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகள் தங்கள் உறவினர்களுடன், நண்பர்களுடன் பேசி தொடர்பு கொள்ளவும் இந்த போன்கள் பயன்படுத்தப்படும். 

நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டவுடன், இந்த போன்கள் மொத்தமாக அழிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எபோலாவினை எதிர்த்த போராட்டத்தில் எல்.ஜி. நிறுவனமும் இறங்கியுள்ளது. கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனமும், தன் பங்கிற்கு 2,000 ஸ்மார்ட் போன்களை வழங்கும் தகவல் வெளியாகியுள்ளது. இவையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் மூலமாக, எபோலா வைரஸ் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள குழுவினர் பயன்படுத்த வழங்கப்படும். ஐக்கிய நாடுகள் சபையில், மனிதநேய செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் குழு (Coordination of Humanitarian Affairs (OCHA)) இந்த போன்களை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget