தாய்மேல் ஆணை படத்தில் வில்லன் வேடத்தில் அறிமுகமானவர் பாண்டிச்சேரி ஆனந்தராஜ். தொடர்ந்து வில்லனாக நடித்து வந்த ஆனந்தராஜ் கவர்மெண்ட் மாப்பிள்ளை, டேவிட் அங்கிள் உள்பட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். சரத்குமார், விஜயகாந்த் படங்களின் ஆஸ்தான வில்லனாக இருந்தார்.
கடந்த சில வருடங்களாக அதிக வாய்ப்பில்லாத ஆனந்த ராஜ் சிறு சிறு வேடங்களிலும், காமெடி கேரக்டர்களிலும் சில படங்களில் நடித்தார். கடைசியாக முண்டாசுபட்டியில் காமெடி வில்லனாக நடித்தார். இப்போது பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார்.
அஜய்தேவ்கான், சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் பிரபுதேவா இயக்கும், ஆக்ஷன் ஜாக்ஷன் படத்தில் வில்லனாக நடிக்கிறார். மொட்டைத் தலை அதில் ரஷிய அதிபர் கார்பசேவ் மாதிரி ரத்த தழும்பு என அவரது தோற்றம் வித்தியாசமாக இருக்கிறது. அவரது போர்ஷன் முழுவதும் பாங்காங்கில் படமாக்கப்பட்டுள்ளது. அஜய்தேவ்கானுடன் பயங்கரமான சண்டைக் காட்சியில் நடித்துள்ளார்.
ஆக்ஷன் ஜாக்ஷன் டிரைலரில் இரண்டு நோடிகள் வரும் ஆனந்தராஜின் போஸை (அருகில் உள்ள படம்) பார்த்து விட்டு அவருக்கு இந்தி வில்லன் வாய்ப்புகள் குவிகிறாம். படத்திற்காக 12 கிலோ எடை குறைத்துள்ள ஆனந்தராஜ் தற்போது இந்திப் படத்தில் நடிப்பதற்கு வசதியாக தீவிரமாக இந்தி கற்று வருகிறார்.
கருத்துரையிடுக