கூகுளின் இணையக் மொழி கூட்டமைப்பு

சென்ற வாரம், கூகுள், இந்தியாவில், “இந்திய மொழிகளுக்கான இணையக் கூட்டமைப்பு (“Indian Languages Internet Alliance (ILIA)” என்ற ஓர் அமைப்பை
ஏற்படுத்தியுள்ளது. அடிப்படையில், இது தகவல் மற்றும் செய்திகளை, மாநில மொழிகளில் தருகின்ற அமைப்புகளுடனான கூட்டு ஆகும். இதில் அரசும் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டுள்ளது. முதலில், தொடக்கத்தில், இந்தி மொழி பயன்பாட்டினை இணையத்தில், இப்போது இருப்பதற்கும் மேலாகக் கொண்டு வரப்படும். பின்னர், மற்ற மாநில மொழிகளிலும் கொண்டு வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். அவரவர் மொழிகளில், தகவல்களும், செய்திகளும் மக்களுக்கு இணையம் வழியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற இலக்குடன் இந்த அமைப்பு செயல்படும்.
இந்த அமைப்பின் ஒரு செயல்பாடாக, இந்த முகவரியில் இந்தி மொழிக்கான இணைய தளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதில் இந்தி மொழியில் தகவல்கள் கிடைக்கின்றன. இதனால், ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள இயலாதவர்கள், இதன் மூலம் தகவல்களையும் செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம். 

கூகுள் ”ஒலி வழி தேடல்” முறையினை (Voice Search) அறிமுகப்படுத்தி செம்மைப்படுத்தியுள்ளது. இந்தி மொழியில் டெக்ஸ்ட் டைப் செய்திட, வேகமாக டைப் செய்திடும் வழிகளைக் கொண்ட கீ போர்ட் ஒன்றை வடிவமைத்து தந்துள்ளது. ஓப்பன் சோர்ஸ் முறையில் இயங்கும் இந்தி எழுத்துக்கள் பல கொண்ட தொகுதி ஒன்றும் தரப்பட உள்ளது. இதனால், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டரிலும் இவற்றைப் பயன்படுத்தலாம். இந்தி மொழியில் எழுத விரும்புபவர்களுக்கும், வலைமனையினை உருவாக்கி, தங்கள் கருத்துகளைப் பதிபவர்களுக்கும் இவை மிகவும் உதவியாக இருக்கும். 

ஏற்கனவே, இந்தியாவில் 20 கோடி பேர் முழுமையாக இணையத்தைப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். இவர்கள் முதல் நிலையிலேயே இணையத்தைப் பயன்படுத்துபவர்களாக இருந்ததனால், ஆங்கிலம் இவர்களுக்கு தெரிந்து இருந்தது. ஆனால், அடுத்த 30 கோடி பேர், ஆங்கிலம் அறியாதவர்களாக, அல்லது முழுமையாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களாக இருப்பார்கள். எனவே அவர்களின் தாய் மொழி வழியாகத்தான், இணையம் அவர்களுக்குத் தரப்பட வேண்டும். அதற்காக இந்த ”இந்திய மொழிகளுக்கான இணையக் கூட்டமைப்பு” செயல்படும் என கூகுள் இந்தியா நிறுவனப் பிரிவின் தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பின் மூலம் 2017 ஆம் ஆண்டில், இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 கோடியை எட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்த அமைப்பு உருவாக்கமே, இந்த இலக்கிற்கான முதல் படி ஆகும். தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் இந்த கூட்டமைப்பின் சார்பாக அமைக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றுக்கும், குறிப்பிட்ட பணி இலக்காக நிர்ணயிக்கப்படும். அண்மையில் துவக்கப்பட்டுள்ள Hindiweb.com இணைய தளம் நுகர்வோருக்கான தளமாக இயங்கும். யார் வேண்டுமானாலும், இதன் ஓர் அங்கமாகச் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget