இந்தியாவில் அசுர வளர்ச்சி அடையும் வாட்ஸ் அப்

மொபைல் சாதனங்களில், எளிதாகவும், விரைவாகவும் மெசேஜ் மற்றும் இணைந்த பைல்கள் அனுப்பப் பயன்படும் அப்ளிகேஷன்களில்
வாட்ஸ் அப் உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் இந்திய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சென்ற மாதம் 7 கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பன்னாட்டளவிலான வாடிக்கையாளர் எண்ணிக்கையில் 10% அளவில் உள்ளது. 

இந்த 7 கோடி பேர், குறைந்தது மாதம் ஒருமுறையாவது வாட்ஸ் அப் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகின்றனர் என இந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் துணைத் தலைவர் அரோரா குறிப்பிட்டுள்ளார். உலக அளவில் மொத்த பயனாளர் எண்ணிக்கை 60 கோடியாக உள்ளது. இவர்களில் 10 சதவீதப் பேரைக் கொண்டுள்ள இந்தியா, வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு நல்லதொரு சந்தையாக உள்ளது. 

இதனாலேயே இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் தன் தனிக் கவனத்தினை வாட்ஸ் அப் கொண்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம் இதனைக் கையகப்படுத்திய பின்னும், வாட்ஸ் அப் தன் தனித்தன்மையை தொடர்ந்து கொண்டுள்ளது. பேஸ்புக் சமூக இணைய தளத்துடன் இது இணையாது என்றும் அவர் அறிவித்தார். (அரோரா டில்லி ஐ.ஐ.டி. யின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.)

வாட்ஸ் அப் நிறுவனத்தில் பணியாற்றும் 80 ஊழியர்களும், பேஸ்புக் நிறுவனச் செயல்பாடுகள் வழியாகப் பல நுணுக்கங்களைக் கற்று வருகின்றனர். 

1,900 கோடி டாலர் கொடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனத்தை வாங்கியது. இதனை மதிப்பிட்டு, பரிமாற்றத்தினை முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆனது. ஆனால், இந்த காலத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், இதனை முடித்திருந்தால், சில லட்சம் டாலர்களிலேயே பரிமாற்றம் முடிந்திருக்கும். இடைப் பட்ட காலத்தில் வாட்ஸ் அப் பெற்ற அபரிதமான வளர்ச்சி அதன் மதிப்பை எங்கோ கொண்டு சென்று விட்டது எனவும் அரோரா தெரிவித்துள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget