கோலிவுட்டில் ரீ என்ட்ரியாகும் கும்தாஜ்

மும்தாஜ் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு போட்டியாக களம் இறங்கியவர் கும்தாஜ். ஆரம்பத்தில் ஒரு சில படங்களில்
ஹீரோயினாக நடித்தவருக்கு அதன் பிறகு கவர்ச்சி ஆட்டத்திற்குதான் வாய்ப்பு கிடைத்தது. மலையாள கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அவர் ரீ என்ட்ரி ஆகும் படத்தின் பெயர் "போகப்போக புரியம்". இதில் பென்ஸின், ராகேஷ், அக்ஷயா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். சிலை கடத்தல் சம்பந்தப்பட்ட இந்தப் படத்தில் கும்தாஜும், ஷகீலாவும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். வி.சிவானந்தம் ஒளிப்பதிவு செய்கிறார், ஆதீஷ் இசை அமைக்கிறார். வி.எம்.வி ஹனீபாவின் உதவியாளர் வேலு பீதாம்பரம் இயக்குகிறார். கேரளாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஷகிலா கவர்ச்சியிலிருந்து காமெடிக்கு மாறியதைப்போல கும்தாஜும் மாறியிருக்கிறாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget