வாழைக்காய் வறுவல்

தேவையான பொருட்கள்

வாழைக்காய் - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் (குவித்து அளக்கவும்)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்


செய்முறை

வாழைக்காயின் தோலை சீவி விட்டு, 1/4 அங்குல கனத்திற்கு வட்ட வடிவில் வில்லைகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு நன்றாக அலசி விட்டு, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போடவும். அத்துடன் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, ஒரு கையளவு தண்ணீரையும் தெளித்து நன்றாகப் பிசறி வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் பிசறி வைத்துள்ள வாழைக்காய் வில்லைகளைப் போட்டு கிளறி விடவும். ஒவ்வொரு துண்டுகளையும் தனித்தனியாகப் பரப்பி விட்டு, மூடி போட்டு சிறு தீயில் வேக விடவும். அவ்வப்பொழுது மூடியைத் திறந்து கவனமாக வில்லைகளைத் திருப்பி விட்டு வேக விடவும். காய் வெந்ததும், மூடியை எடுத்து விட்டு, காய் பொன்னிறமாக ஆகும் வரை திருப்பி விட்டு எடுக்கவும்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget