கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெளியான நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர் பவர்ஸ்டார் சீனிவாசன். அவர் எந்த விழாக்களுக்கு சென்றாலும்
ரசிகர்கள் கைதட்டி பலத்த ஆரவாரம் செய்து வந்தனர். அப்போது அவர் மேடைகளில் பேசும்போது, எனக்கு இந்த சினிமாவில் போட்டி என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்று அதிரடியாக பேசி வந்தார். பவர்ஸ்டாரின் இந்த பேச்சினை ரசிகர்களெல்லாம் ஜாலியாக ரசித்தனர். யாருமே இதை காரசாரமாக எடுத்துக் கொள்ளவில்லை.காரணம் சொல்வது காமெடி பீசாச்சே.
இந்த நிலையில், சிறைக்கம்பிகளை எண்ணச்சென்று விட்ட பிறகு சில படங்களில் நடித்தும் அவரது காமெடிகள் பேசப்படவில்லை. அதனால் ஏதாவது அதிரடியாக செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்த பவர்ஸ்டாருக்கு தற்போது கிடா பூசாரி மகுடி என்றொரு படத்தில் தீவிர ரஜினி ரசிகராகவே நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
மேலும்,இந்த படத்தில், ஜானி படத்தில் ரஜினி நடித்தது போன்று சலூன் கடை நடத்துபவராக நடித்திருக்கிறார் பவர்ஸ்டார். அதோடு ரஜினி ரசிகர் என்பதால் அந்த படத்தில் அவர் அணிந்தது போன்ற காஸ்டியூம் அணிந்தே நடித்திருக்கிறாராம். முக்கியமாக சில காட்சிகளில் ரஜினியின நடிப்பையும் ஸ்டைலாக ஆங்காங்கே வெளிப்படுத்தியுள்ள பவர்ஸ்டாருக்கு இந்த படம் தியேட்டருக்கு வரும்போது பெரிய கைதட்டல் கிடைக்கும் என்கிறார்கள்.

கருத்துரையிடுக