எமி ஜாக்சனின் ஹீரோ வேட்டை

மதராசப்பட்டினம், தாண்டவம் படங்களுக்குப்பிறகு ஷங்கரின் ஐ என்ற பிரமாண்ட படத்தில் நடித்து பிரமாண்ட நடிகையாகியிருக்கிறார் எமி ஜாக்சன்.
இந்த நிலையில், ஐ படத்தை முடித்து விட்ட எமிக்கு வெங்கட்பிரபு இயக்கத்தில், சூர்யா நடிககும் மாஸ் படத்தில் அடுத்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதேபடத்தில் இன்னொரு நாயகியாக நயன்தாராவும் இருந்தபோதும, எமிக்கும் வெயிட்டான வேடம்தானாம். ஐ படத்திற்கு பிறகு லண்டன் சென்று விட்ட அவர், தற்போதுதான் மாஸ் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருக்கிறார். மேலும் இதற்கு முன்பு ரொமான்டிக்கான வேடங்களில் நடித்த எமிக்கு இந்த படத்தில் காமெடி கலந்த ஜனரஞ்சகமான வேடமாம்.

இந்த நிலையில், அடுத்து, தமிழ், இந்தி மட்டுமின்றி மற்ற இந்திய மொழிகளிலும் பரவலாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் எமிஜாக்சனுக்கு வித்தியாசமான வேடங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதைவிட, மெகா பட்ஜெட் படங்கள், மாஸ் ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்பதே அவரது முதல் சாய்சாக இருக்கிறதாம். அதனால் சில சினிமா மேனேஜர்கள் மூலம் வேற்று மொழி பட வேட்டையிலும இறங்கியிருக்கிறாராம் எமி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget