கேள்வி: கோக் விளம்பரத்தில் நடித்த நீங்கள் கத்தி படத்தில் அதற்கு எதிரான வசனம் பேசியிருக்கிறீர்களே?
பதில் : நான் சராசரி மனிதன் தான். எனது சில தவறுகளை திருத்திக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன் கோக் விளம்பர படத்தில் நடித்தேன். இப்போது இல்லை. கத்தி கதை பிடித்திருந்ததால் ஜீவா கேரக்டர் வழியாக எனது கருத்தை சொன்னேன். இதே கேள்வியை அரசியல் கட்சிகள் கூட்டணி மாற்றிக் கொள்ளும்போதும் கேட்டால் சந்தோஷப்படுவேன்.
கேள்வி: உங்கள் ரசிகர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : அவர்கள் என் வெற்றியால் என்னிடம் ஒட்டிக் கொண்டவர்கள் அல்ல. என் தோல்வியிலும் தட்டிக் கொடுத்தவர்கள்.
கேள்வி: உங்கள் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில் : நான் உங்களை விரும்புகிறேன்.
கேள்வி: மலையாள படங்களில் நடிப்பீர்களா?
பதில் : மோகன்லால் சாருடன் நடித்து விட்டேன். நடிக்கும் ஆர்வம் இருக்கிறது பார்க்கலாம்.
கேள்வி: ஹாலிவுட் படத்தில் நடிப்பீர்களா?
பதில் : நம்ம ஊரே நமக்கு போதுங்கண்ணா.
கேள்வி: உங்கள் ரசிகர்களும், அஜீத் ரசிகர்களும் இணைய தளத்தில் மோதிக் கொள்கிறார்களே?
பதில் : இது மாதிரி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அது தப்பான விஷயம்.
கேள்வி: உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
பதில் : என் வாழ்க்கை புத்தகத்தை இறைவன் எழுதிவிட்டான். அதன் அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. எல்லா பக்கத்தையும் சந்தோஷமாக கடந்து செல்கிறேன்.
கேள்வி: விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்-?
பதில் : பாசிட்டிவான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வேனோ அப்படியே நெகட்டிவான விமசர்னங்களையும் எதிர் கொள்வேன்.
கேள்வி: சில விஷயங்களில் பயப்படுகிறீர்கள், சில விஷயங்களில் பதுங்குகிறீர்களே?
பதில் : பயப்படவும் இல்லை. பதுங்கவும் இல்லை அனுபவங்களை பெற்றுக் கொள்கிறேன்.
இவ்வாறு விஜய் பதலளித்துள்ளார்.
கருத்துரையிடுக