சூப்பர் ஸ்டார் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிப்பிலும், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்திலும் உருவாகி வரும் லிங்கா படத்தை
ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். இந்தப் படம் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. படத்தின் தியேட்டர் உரிமையை ஈராஸ் நிறுவனம் 125 கோடிக்கு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல வெளிநாட்டில் திரையிடும் (எப்.எம்.எஸ்) உரிமம் 20 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தமிழ் சினிமா வரலாற்றில் உச்சபட்ச வியாபாரம் என்று கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாகியுள்ளது லிங்கா படம். தமிழ் மற்றும் தெலுங்கு படத்தின் ஆடியோ விழா வருகிற நவம்பர் 16ம் தேதி வெளியாகும் என்று ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி இன்னும் முடிவாகவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் படம் டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்தநாள் அன்று உறுதியாக ரிலீஸாகும் என ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக