இந்திய டென்னிஸ் உலகின் முன்னணி நட்சத்திரமான சானியா மிர்சா அவருடைய அழகான தோற்றத்தாலும் உலகம் முழுவதும்
எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றவர். அவருக்கு இதற்கு முன்பு நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்தாலும் எதையுமே அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழித் தயாரிப்பாளர்கள் அவரைத் தங்களது படங்களில் நடிக்க எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால், டென்னிஸ் விளையாட்டுதான் முக்கியம் என சானியா, நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டார்.
இருந்தாலும் சில விளம்பரப் படங்களில் நடித்தவரான சானியா மிர்சா தற்போது 'ஜேம்ஸ்பாண்ட்' படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.இரு தினங்களுக்கு முன், அவருடைய டுவிட்டர் வலைத்தளத்தில், “பாண்ட் என்பது ஒரு உலக அடையாளம். 'பாண்ட்' வாய்ப்பை ஏற்றுக் கொள்வதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்,” என்று குறிப்பிட்டிருந்தார். நேற்று, “உண்மையிலேயே தடுக்க முடியாத ஒன்று...மிர்சா..சானியா மிர்சா...'பாண்ட்'டுடன் முன்னெடுத்துச் செல்கிறேன். உங்களது வாழ்த்துகள் தேவை”, எனக் குறிப்பிட்டுள்ளார். அதோடு ஒரு அட்டகாசமான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இது உண்மையிலே அவர் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடிப்பதைப் பற்றிக் குறிப்பிடுகிறதா அல்லது ஏதாவது விளம்பரப் படப்பிடிப்பா என்பதை சானியா மிர்சா தெளிவாகச் சொல்லவில்லை.
ஒரு வேளை சானியா மிர்சா, ஹாலிவுட் படத்தில் நடித்தால் உலகப் புகழ் பெறலாம் என நினைத்து இந்தியப் படங்களில் நடிப்பதற்கு முன்பாக ஹாலிவுட் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாரோ என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.

கருத்துரையிடுக