தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும், வில்லியாகவும், கவர்ச்சி நடன நடிகையாகவும்
விளங்கியவர் ஜோதிலட்சுமி. 1963-ல் பெரிய இடத்துப் பெண் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர், அதன் பின் சிறு சிறு கதாபாத்திரங்களிலும், சில படங்களில் வில்லியாகவும் நடித்தார். 70களில் கிளாமரான பாடல்களுக்கு கவர்ச்சி நடனமாடும் நடிகையாகவும் நடித்து அந்தக் காலத்தில் புகழ் பெற்றவராக விளங்கினார். 80களில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய நடிகை ஜெயமாலினியின் அக்காதான் ஜோதிலட்சுமி. இன்றைய சினிமா ரசிகர்களுக்கு இவர் யார் என்று சொல்ல வேண்டுமென்றால், பாலா இயக்கிய முதல் படமான சேது படத்தில் கானக் கருங்குயிலே...கச்சேரிக்கு வரியா...வரியா... என்ற பாடலுக்கு அசத்தல் நடனமாடினாரே அவர்தான் ஜோதிலட்சுமி.இவருடைய வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் ஜோதிலட்சுமி என்ற படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியானது. அந்த கதாபாத்திரத்தில் நடிகை சார்மி நடிக்க உள்ளார் என்றும் சொன்னார்கள். ஆனால், அந்த படத்தில் தான் நடிப்பது உண்மைதானென்றும், அதே சமயம் படத்தின் பெயர்தான் ஜோதிலட்சுமியே தவிர, அது வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற யாருடைய வாழ்க்கை வரலாறும் அல்ல என்றும் சார்மி தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக, இந்தியில் நாயகியருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெறுவதையடுத்து, தென்னிந்திய மொழிகளிலும் அப்படிப்பட்ட படங்கள் அதிகமாக தயாராக ஆரம்பித்துள்ளன. ஜோதிலட்சுமி அம்மாதிரியான ஒரு படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கருத்துரையிடுக