மார்பக புற்றுநோய் வந்த பெண்கள்

மார்பகத்தில் புற்று நோய் ஆரம்ப கட்டங்களில் எந்த மாற்றமும் தெரியாது வலியும் இருக்காது. ஏதாவது ஒரு இடத்தில் தடித்த சதையை
உணர்ந்தாலோ அல்லது வடிவத்தில் ஏதேனும் மாற்றம் தெரிந்தாலோ அலட்சியமாக இருக்காதீர்கள்.

உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யுங்கள் முதுகு வலி, கை வலி, தோள் பட்டை வலி என்று நீண்ட காலமாக ஏதாவது தொந்தரவு இருந்தால் சாதாரண சதைப் பிடிப்பு என்று விட்டு விடாதீர்கள். வரும் முன் காப்பதே நலம். ஆக அவ்வப்போதும், குளிக்கும் போதும், படுக்கும் போது இரண்டு மார்பகங்களையும் அழுத்தி தடவி சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 

எந்த வித சின்ன மாற்றம் தெரிந்தாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள். புற்று நோய் வந்து விட்டால் அவ்வளவுதான் உயிரேப் போய்விடும் வாழ்க்கையே முடிந்தது என்று இல்லை. எத்தனையோ பெண்கள் இதை வெற்றிகரமாக வென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. 

மருத்துவத்தை விட மனோ பலமும் மனித பலமும் தான் இந்நோய் தாக்கியாவருக்கு அதிமுக்கியம்.பெண் என்பவள் ஒரு குடும்பத்தின் குத்து விளக்கு அஸ்திவாரம். பிள்ளைகளின் அரண். மார்பக புற்று நோய் ஒரு பெண்ணின் வேதனை மட்டும் அல்ல மொத்தக் குடும்பத்திற்கு வரும் சோதனை. 

ஆக குடும்பமாக உறவாக அரவணைத்து அவளை ஊக்குவித்து புற்று நோய்க்கு பின்னும் ஒரு அழகிய வாழ்க்கை வரும் என்று நம்பிக்கையூட்டி வழிநடத்த வேண்டும். தனிமனித போராட்டம் அல்ல இது ஒட்டு மொத்த குடும்பத்தின் போராட்டம். ஆனால் உரிய நேரத்தில் உரிய சிகிச்சையளித்து தன்னம்பிக்கையோடு அவளுடன் அனைவரும் போராடினால் வெற்றி நிச்சயம்.. 

வாழ்க்கை மீண்டும் நம் கையில். அவ்வளவு தானா வாழ்க்கை? இல்லை கான்சருக்கு பின்னும் இருக்கு ஆனந்தமான வாழ்வு. ஆனா அதைக் கடக்க வேண்டும் துணிவு, தீவிர சிகிச்சை, உறவுகளின் பலம் நம்பிக்கை. 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget