செல்போனுக்கு அடிமையாகும் இளம் தலைமுறை

இன்றைய காலகட்டத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவு அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்
போயிருக்கிறது. பெற்றோருக்கு நிறைய விஷயங்கள் தெரியும், பிள்ளைகளுக்கு ஒன்றும் தெரியாது என்னும் நிலை தலைகீழாக மாறிவிட்டிருக்கிறது. 

பெற்றோரின் அதிகாரம் பெரிதும் குறைந்துபோயிருக்கும் காரணத்தால் பிள்ளைகளின் மண வாழ்க்கையில் தம் அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கப் பெற்றோர்கள் மெனக்கெடுகிறார்கள். பிள்ளைகளும் முன்பு போலன்றிப் பெருமளவுக்கு மின்னணுச் சாதனங்களைச் சார்ந்த வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். 

செல்ஃபோன், கம்ப்யூட்டர், ஐபாட், டேப்லெட் என்று தொழில்நுட்பத்தின் இன்றைய கண்டுபிடிப்புகளுடன் வாழ்கிறார்கள். தாய் தந்தையரின் பங்கை இண்டர்நெட் எடுத்துக்கொண்டு விட்டிருக்கிறது. ஒரு இளம்பெண்ணிடம் ஒரு இளைஞனோ அல்லது ஒரு இளைஞன் ஒரு இளம்பெண்ணுடனோ கொஞ்சம் கனிவாகப் பேசினால் அது காதல் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. 

சிநேகம், காதல், இந்த இரண்டுக்கும் இடையில் ‘கேர்ள் ஃப்ரெண்ட்-பாய் ஃப்ரெண்ட்’ என்று புதிதாக ஒரு தளம் உருவாகியிருக்கிறது. பாய் ஃப்ரெண்ட் இல்லாத ஒரு பெண் ஏதோ அடிப்படைத் தகுதியை இழந்துவிட்டவள்போல் கணிக்கப்படுகிறாள். அதேபோல் கேர்ள் ஃப்ரண்ட் இல்லாத ஒரு இளைஞன் மட்டமாகப் பார்க்கப்படுகிறான். 

இளைய தலைமுறையினர் தன் சுயத்தைப் பற்றிய உணர்வை அடைவதற்கு இதுபோன்ற விஷயங்களைச் சார்ந்திருக்கிறார்கள். இந்த இலக்கணம் புதிதாக இருக்கும் காரணத்தால் பெற்றோர்களும் செய்வதறியாமல் தவிக்கிறார்கள். 

இந்தக் காரணங்களால் இந்தத் தலைமுறையினரின் உறவுகள் குழப்பத்தில் சிக்குண்டிருக்கின்றன. இதில் யாரையும் குறை சொல்வதில் அர்த்தமில்லை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget