மினி ரோலிங் கேக் @ சாக்லெட் சாஸ்

தேவையான பொருட்கள்

மைதா மாவு - ஒன்றரை கப், 
கோகோ பவுடர் - 1 டேபிள்ஸ்பூன், 
பேக்கிங் பவுடர், சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை, 
கன்டென்ஸ்டு மில்க் - அரை டின், 

சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன் (பொடித்தது), 
வெண்ணெய் - அரை கப்.

அலங்கரிக்க தேவையான பொருட்கள்

டிரை ப்ரூட்ஸ் 
அல்லது கிரீம், செர்ரி.

சாஸ் செய்ய தேவையான பொருட்கள்

ஏதாவது சாக்லெட் பார் துருவியது - அரை கப், 
சர்க்கரைத்தூள் - கால் கப், 
வெண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை

மைதா, சோடா உப்பு, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர் எல்லாவற்றையும் சேர்த்து 2 முறை சலிக்கவும். வெண்ணெய், சர்க்கரை, கன்டென்ஸ்டு  மில்க்  சேர்த்து ஒரே பக்கமாக அடிக்கவும். இது நன்கு பொங்கி வரும்போது சலித்த மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கலந்து  வெண்ணெய் தடவிய அலுமினிய கேக் கப்புகளில் அல்லது மைக்ரோ வேவ் கப்புகளில் முக்கால் பாகம் நிரப்பி ஏற்கனவே சூடு படுத்தப்பட்ட ஓவன்  அல்லது மைக்ரோவேவில் வைத்து பொன்னிறமாகும் வரை பேக் செய்து எடுத்து ஆறவிடவும். பின் தட்டில் வைத்துக் கொள்ளவும்.

சாஸ் செய்யும் முறை... 

சாஸ் செய்வதற்கு கொடுத்துள்ளதை ஒரு பானில் சூடு செய்யவும். அது உருகியதும் ரெடியாக செய்து வைத்துள்ள கேக்கை ஒவ்வொன்றாக எடுத்து  ஒரு மூங்கில் குச்சியில் குத்தி ரோல் செய்து கொண்டே அதன்மேல் சாஸ்சை ஊற்றவும். உடனே பரிமாறவும். சில்லென்று வேண்டும் என்றால் குளிர  வைத்து அலங்கரித்துப் பரிமாறவும். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget