கோலிவுட் புது வரவு சமஸ்கிருதி

சினிமா உலகைப் பொறுத்தவரை ஒரு படத்துக்கு கதைக்காக மெனக்கெடும் நாட்களை விட கதாநாயகி தேடுவதில்தான் அதிக காலம்
எடுத்துக்கொள்வார்கள். முதலில் சென்னையில் நடிகை தேடும் படலத்தை தொடங்குபவர்கள், பின்னர் எதுவுமே கதைக்கு பொருத்தமாக இல்லை என்று சொல்லிக்கொண்டு ஐதராபாத், பெங்களூர், மும்பை என்று நாயகி வேட்டையை தொடருவார்கள்.

கடைசியில், ஏதோ ஒரு நடிகையை புக் பண்ணி மாடல் என்ற பெயரில் கோடம்பாக்கத்தில் இறக்குமதி செய்வார்கள். இதுதான் கோலிவுட்டில் நீண்டகால வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கேரளத்து நடிகைகளே கோடம்பாக்கத்தை ஆக்ரமித்து வருவதால். மும்பையை மறந்து விட்டு கதாநாயகிக்காக தமிழ் படக்குழுவினர் கேரளா செல்கிறார்கள்.

அந்த வகையில், தற்போது விதார்த் நடித்துள்ள காடு படத்துக்காக கதாநாயகி வேட்டை நடத்த கேரளா சென்றவர்கள், எர்ணாகுளம் சென்று சமஸ்கிருதி என்ற நடிகையைத்தான் முதலில் பார்த்தார்களாம். அதையடுத்து இன்னும் நிறைய நடிகைகளை பார்த்து விட்டுத்தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான் அவர்களது யோசனையாக இருந்ததாம்.

ஆனால், சமஸ்கிருதியின் முகச்சாயல் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியதால் வேறு நடிகையே பார்க்க வேண்டிய அவசியமில்லை. இவரே போதும் என்று முடிவெடுத்து அவரை புக் பண்ணினார்களாம். 

ஆக, கோடம்பாக்கத்தில் ஒரு கதாநாயகிக்காக நூற்றுக்கணக்கான நடிகைகளின் புகைப்படங்களை பார்த்து செலக்ட் பண்ணி சுமார் 6 மாத காலமாவது அதற்காக செலவிட்டு வரும் சில டைரக்டர்களுக்கு மத்தியில், பார்த்த முதல் நடிகையையே செலக்ட் பண்ணி காடு படத்தில் நடிக்க வைத்து சாதனை நிகழ்த்தியிருக்கிறார் புதுமுக டைரக்டர் ஸ்டாலின் ராமலிங்கம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget