பெங்காலி நடிகையின் கில்லாடி வேலை

நகை கடையில் நகை திருடிய கவர்ச்சி நடிகை சுவஸ்திகா, கையும் களவுமாக சிக்கினார்.


சுவஸ்திகா பெங்காலி மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். நிறைய படங்களில் அரை குறை ஆடையில் கவர்ச்சியாக குத்தாட்டமும் ஆடி உள்ளார்.

சிங்கப்பூரில் பெங்காலி மொழி பட விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக சுவஸ்திகா அங்கு சென்று இருந்தார். நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த அவருக்கு திடீரென ஷாப்பிங் போக ஆசை ஏற்பட்டது. அருகில் உள்ள மார்க்கெட்டில் இருந்த நகை கடைக்கு பையுடன் சென்றார். நிறைய வித விதமான நகைகளை எடுத்து பார்த்து விலை கேட்டார். அப்போது காது கம்மல் ஜோடி யொன்றை நைசாக எடுத்து கைப்பைக்குள் போட்டுக் கொண்டாராம்.

இது அங்குளள சி.சி.டி.வி.கேமராவில் பதிவானது. பிறகு நகை ஏதும் வாங்காமல் நைசாக வெளியேறினார்.

நகை கடை பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி பையை சோதனை போட்டு உள்ளே இருந்த கம்மல்களை எடுத்தனர். இதையடுத்து சிறிது நேரம் கடைக்கு உள்ளேயே சுவஸ்திகா சிறை வைக்கப்பட்டார். கம்மலை நான் எடுத்து போடவில்லை. பைக்குள் அவை எப்படி விழுந்தன. என்று தனக்கு தெரியாது என்று சொல்லி கெஞ்சினார். பின்னர் கடை ஊழியர்கள் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget