சீஸ் கேக்

தேவையான பொருட்கள்

பிஸ்கட் தூள் (graham crackers) – ஒன்றரைக் கோப்பை
சர்க்கரை – கால் கோப்பை
உருக்கிய வெண்ணெய் – கால் கோப்பை
க்ரீம் சீஸ் – 8 அவுன்ஸுள்ள இரண்டு பாக்கெட்
புளித்த கிரீம்(sour cream) – அரைக்கோப்பை

முட்டை – இரண்டு
சர்க்கரை – ஒரு கோப்பை
சோள மாவு – ஒரு மேசைக்கரண்டி
துருவிய எலுமிச்சை தோல் – ஒரு பழம்
வென்னிலா எசன்ஸ் – அரைதேக்கரண்டி
புளூ பெர்ரி – ஒன்றரைக்கோப்பை
சர்க்கரை – அரைக்கோப்பை
எலுமிச்சைச்சாறு – ஒரு மேசைக்கரண்டி
தண்ணீர் – இரண்டு மேசைக்கரண்டி

செய்முறை

ஒரு கோப்பையில் பிஸ்கட் தூளுடன் சர்க்கரை போட்டு உருக்கிய சூடான வெண்ணெயை ஊற்றி நன்கு கலக்கவும். அல்லது மிக்ஸரில் பிஸ்கட்டுகளைப் போட்டு தூளாக்கி அதனுடன் சர்க்கரையையும் வெண்ணெயையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

இதனை சீஸ் கேக் செய்வதெற்கென்றே உள்ள மீடியமான அளவுள்ள பேனில் கொட்டி சமமாக பரவலாக தட்டவும்.

பிறகு இதை 350 டிகிரி சூடாக்கிய அவனில் வைத்து பேக் செய்யவும்.
ஐந்து அல்லது ஆறு நிமிடத்தில் நல்ல பிரவுன் கலரில் ஆனவுடன் வெளியில் எடுத்து விடவும்.

பிறகு பிஸ்கட் தூளாக்கிய மிக்ஸரில் முதலில் க்ரீம் சீஸையும், சவர் க்ரீமையும் சேர்த்து போட்டு நன்கு கலக்கவும்.

பிறகு சர்க்கரை, சோளமாவு, துருவிய எலுமிச்சை தோல், முட்டை மற்றும் வென்னிலா எசன்ஸ் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து கலக்கவும்.

பிறகு இந்த கலவையை தயாராகியுள்ள கிரஸ்ட்டில் பரவலாக ஊற்றி ஒரு கரண்டியின் உதவியால் சமப்படுத்தவும்.

பிறகு அவனை 300 டிகிரி Fல் சூடாக்கி அதில் வைத்து ஒரு மணி நேரம் வரை பேக் செய்யவும். அல்லது க்ரீம் கலவை நன்கு கெட்டியாகும் வரை வைத்திருந்து வெளியில் எடுத்து ஆறவைத்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்து விடவும்.

இதற்கிடையில் ஒரு சிறிய பாத்திரத்தில் பழங்களுடன் சர்க்கரை, தண்ணீர், எலுமிச்சை சாறு ஆகியவற்றைப் போட்டு கெட்டியான சிரப்பாகும் வரை மிதமான தீயில் வைத்திருந்து இறக்கி விடவும்.

நன்கு குளிர்ந்து செட்டிலான கேக்கை பரிமாறும் தட்டில் வைத்து துண்டுகள் போட்டு பழச்சிரப்பை மேலாக ஊற்றி பரிமாறவும்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget