கோபத்தை தவிர்க்க கொல்லி மலை ரகசியம்

கோபம் என்பது ஒரு உணர்ச்சி. சிறிய வெளிப்பாட்டிலிருந்து மிகப்பெரிய பாதிப்பு வரை ஏற்படுத்தக் கூடியது. சில மாற்றங்களை கோபம்
உடலில் ஏற்படுத்தும். இருதய படபடப்பு, இரத்தக் கொதிப்பு கூடும். இதற்குரிய ஹார்மோன் வெளியாகும். 

உடல் சூடு, வியர்வை, உடலில் ஒருவித நடுக்கம், கட்டுப்பாடின்மை ஏற்படும். கத்தி பேசுதல், பொருட்களை விட்டெறிதல், தனியே ஒதுங்கி விடுதல் போன்றவை ஏற்படும். இதில் ஏற்படும் முரட்டுத்தனமான நடவடிக்கையால் மற்றவர் இவரைக் கண்டு அஞ்சுவர். 

ஏன் கோபம் வருகின்றது? 

இதன் அடிப்படை ஒரு மனிதனின் வெறுப்பே. தான் நினைத்த விதத்தில் ஒரு செயல் நடைபெறவில்லை எனும் பொழுது ஏற்படும் வெறுப்பு, காயம், பயம், ஏமாற்றம், கவலை, சங்கடம் இவைகள் பொதுவில் கோபமாக வெளியாகின்றது. ஒருவருக்கொருவர் சரியான புரிந்துக் கொள்ளல் இல்லாவிடினும் கோபம் ஏற்படுகின்றது. 

பொதுவில், தன்னுடைய உணர்ச்சிகளை ஆண் அவ்வளவாக வெளிப்படுத்துவதில்லை. ஆனால், கோபத்தினை தன்னுடைய பிறப்பின் உரிமையாக கையில் எடுத்துக் கொள்கின்றான். பெண் தன்னுடைய கோபத்தினை கண்ணீரில் மறைக்கின்றாள். 

எப்பொழுது கோபம் பிரச்சினையாக மாறுகின்றது? 

மற்றவர்களோடு சிக்கல் ஏற்படும்பொழுது, உடல்நல பாதிப்பு ஏற்படும் பொழுது, பிறர் அவரோடு ஒத்துப்போக முடியாத பொழுது பிரச்சனையாக மாறுகின்றது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget