சிக்கன் ஷவர்மா

சிக்கன் ஷவர்மா சமீப காலமாக பிரபலமாகிவரும் உணவு வகையாகும். மிக குறைந்த காலத்தில் அனைவருக்கும் விருப்பபான உணவாக மாறிவரும் சிக்கன் ஷவர்மாவை வீட்டிலேயே சுவையாக செய்து அசத்துங்கள்.

தேவையானவை


சிக்கன் (எலும்பு நீக்கியது ) – 1 கிலோ
தயிர் – 1 கப்
வினிகர் – 1/4 கப்
பூண்டு – 4 (நசுக்கியது)
மிளகு தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஏலக்காய், கிராம்பு, (பொடித்தது) – சிறிது
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி(பொடியாக நறுக்கியது) – தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் – தேவைகேற்ப
பீட்டா பிரெட் – 4

செய்முறை

தயிர், வினிகர், பூண்டு,மிளகு தூள், உப்பு, ஏலக்காய், கிராம்பு, எலுமிச்சை சாறு ஆகீயற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒன்றாக கலந்துகொள்ளவும்.

இந்த கலவையுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்த்து, சிக்கன் துண்டுகளையும் சேருங்கள்

சிக்கன் இந்த மசாலா கலவையில் குறைந்தது 8 மணி நேரமாவது ஊறவேண்டும். ஒரு நாள் இரவு முழுவதும் இந்த கலவையை குளிர்சாதன பெட்டியில் வைத்து ஊறவைத்தால் நல்லது.

மசாலாவில் நன்கு ஊறிய சிக்கனை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு மிதமான தணலில் வேகும்வரை சமையுங்கள்.

சிக்கன் வெந்ததும் அதை உங்கள் விருபத்திற்கேற்ப சிறு துண்டுகளாக வெட்டிகொள்ளுங்கள்.

மற்றொரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை ஒன்றாக கலந்துகொள்ளவும்.

பீட்டா பிரெட் பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கும். ஷவர்மாவை பரிமாறும் போது ஒரு பீட்டா பிரெட்டின் மீது காய்கறி கலவை மற்றும் சிக்கன் கலவையை சேர்த்து வைத்து உருட்டி பரிமாறுங்கள்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget