அதிரடி நாயகர்களை அசர வைத்த அனுஷ்கா

அருந்ததி படத்தில் அனுஷ்காவின் மிரட்டலான நடிப்பைப் பார்த்தே மிரண்டு போன நடிகர்கள் பலர். ஆனபோது அதன்பிறகு இவரது திறமைக்கு
சரியான தீனியை எந்த இயக்குனர்களும் போடவில்லை. இந்த நிலையில், தற்போது தெலுங்கில் அவர் நடித்து வரும் ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி படங்களில் அவருக்கு கொளுத்த தீனி போட்டிருக்கிறார்கள் ராஜமவுலி, குணசேகர் ஆகிய இயக்குனர்கள்.

அதிலும் ராணி ருத்ரம்மா தேவி படத்தில் டைட்டீல் ரோலில் நடிப்பதால், அரசர் காலத்து கெட்டப்பில், ஆயுதம் ஏந்தி சண்டை போட்டிருக்கிறார் அனுஷ்கா. கிட்டத்தட்ட 7 மாதங்களாக அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அனுஷ்கா, நம்ம ஊர் விக்ரம் மாதிரி பல முறை உடல் எடையை அதிகப்படுத்தி, குறைத்து என நடித்திருக்கிறாராம்.

அதோடு, சண்டை காட்சிகளில் ஆக்சன் ஹீரோக்களே ரோப் காட்சிகளில் டூப் வைத்து நடிக்கிறபோது அனுஷ்காவோ, தானே ரோப்பில் தொங்கியபடி எதிரிகளுடன் வாள் சண்டை போட்டிருக்கிறார். அதிலும் ஒரு காட்சியில் கிரேனில் 150 அடி உயரத்தில் தொங்கியபடி சண்டை காட்சியில் அனுஷ்கா நடித்திருப்பது ஆந்திர ஹீரோக்களையெல்லாம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். அனுஷ்காவின இந்த துணிச்சலான நடிப்பை ஆளாலுக்கு போன் போட்டு பாராட்டி வருகிறார்களாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget