அப்புச்சி கிராமம் கதை விமர்சனம்

நீண்டநாள் தயாரிப்பில் இருக்கும் அப்புச்சி கிராமம் வருகிற 14ந் தேதி ரிலீசாகிறது. இதில் பிரவீன்குமார், அனுஷா, சுவாசிகா, சுஜா
நடித்துள்ளனர். விண்ணிலிருந்து பறந்து வரும் ஒரு விண்கல்லால் உலகம் அழியபோகிறது என்கிற கதை. ஆனால் இது மூடநம்பிக்கையை வளர்க்கும் படமல்ல என்கிறார் இயக்குனர் வி.ஐ.ஆனந்த்.

அவர் மேலும் கூறியதாவது: பொதுவாகவே சாகுற நாள் தெரிஞ்சு போச்சுன்னா வாழ்ற நாள் நரகமாயிடும்னு சூப்பர் ஸ்டார் ரஜினி சொல்வார். ஒரு வாரத்துல உலகம் அழியப்போவுதுன்னு வச்சிக்குவோம். அப்போ உலகத்துல என்ன நடக்கும்னு தெரியாது. ஆனா ஒரு கிராமத்துல என்ன நடக்கும் அதுதான் இந்தப் படம்.

ஒரு விண் கல் பூமியை நோக்கி வருகிறது அது எங்கு வேண்டுமானாலும் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது ஒரு விஞ்ஞான தகவல். இது ஒரு கிராமத்துக்குள் விண்கல் விழுந்து ஒரு வாரத்துல உலகம் அழியப்போகுதுங்ற செய்தியா பரவிவிடுகிறது. அதன் பிறகு அந்த கிராம மக்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறதுங்றதுதான் கதை. இதில் மூட நம்பிக்கைங்றது கொஞ்சம்கூட கிடையாது. கிராம மக்களின் அப்பாவித்தனம், வெகுளித்தனம், மனிதாபிமானம்தான் வெளிப்படுத்தப்படுகிறது. உலகத்திலேயே எல்லாத்தையும் விட உயர்ந்தது சக மனிதனை நேசிப்பது என்கிற கருத்தை வலுவாக சொல்ற படம். என்கிறார் ஆனந்த்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget