இந்த அவசர உலகில், தங்களுக்கான பொறுப்புகளை சரிவர நிவர்த்தி செய்யும் அனைத்து பெண்களுமே சாதனையாளர்கள்தான்.
தற்போதைய கால கட்டத்தில் அனைத்து துறைகளிலும் பெண்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.
மிகப்பெரிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் இடம்பெற்றிருப்பதும், பல நாடுகள் மற்றும் மாநிலங்களின் தலைமைகளை பெண்கள் ஏற்றிருப்பதும் இதற்கு சான்றுகள். அரசியல், சினிமா, கலை, விளையாட்டு என்று பெண்கள் தடம்பதிக்காத துறைகளே இல்லை.
வீட்டை விட்டு வெளியே வந்து தங்களது திறமையை வெளிப்படுத்தும் பெண்கள் மட்டுமே சாதனையாளர்கள் அல்ல. ஒரு வீட்டில், குடும்பத் தலைவியாக இருந்து குடும்ப உறுப்பினர்களின் அச்சாணியாக செயல்படும் ஒவ்வொரு பெண்ணுமே சாதனையாளர்தான். சிலர் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு வீட்டில் சும்மா தான் இருக்கிறேன் என்று பதில் சொல்வார்கள்.
அது அவர்களைப் பற்றி அவர்களே குறைவான மதிப்பிட்டிருப்பதன் அடையாளம். ஆனால், வீட்டில் இருக்கும் பெண்களின் வேலைகள் சொல்லி மாளாதவை. எனவே, வீட்டில் இருப்போர்.. நிச்சயமாக பெருமையோடு இல்லத்தரசியாக உள்ளேன் என்று சொல்லுங்கள். அதன் கஷ்டம் என்ன என்பது அனைவரும் அறிந்திருக்கும் விஷயம்தான்.
வீட்டை இல்லமாக மாற்றும் திறனும் ஒரு பெண்ணுக்கே உரித்தானது. இருக்கிறார்கள், இதற்கெல்லாம் விதி விலக்காக சில பெண்களும் குடும்பங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், குடும்பத்துக்காக தங்களையே அர்ப்பணித்து வாழும் ஏராளமான பெண்கள் இருக்கும் வரை, இந்த உலகம் எனும் வண்டி எந்த சறுக்கலும் இல்லாமல் வேகமாக இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

கருத்துரையிடுக