பத்மபிரியா காதல் திருமணம்

பத்மபிரியா தமிழில் சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பட்டியல், சத்தம் போடாதே,
மிருகம், பொக்கிஷம், இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படங்களிலும் நடித்தார். கடைசியாக தங்கமீன்கள் படத்தில் நடித்தார். மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

பத்மபிரியாவுக்கும் குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் என்பவருக்கும் மும்பையில் நேற்று காலை திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் யாரையும் அழைக்கவில்லை.

ஜாஸ்மின் ஐ.ஐ.டி.யில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். நியூயார்க்கில் மேல் படிப்பு படித்த போது ஜாஸ்மினும் பத்மபிரியாவும் சந்தித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் காதலை இரு வீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து இன்று திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க பத்மபிரியா முடிவு செய்துள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget