இணையத்தில் முதல் இடம் பிடித்த இந்திய பெண்கள்

அண்மையில் இந்தியாவில் 35 நகரங்களில் இணையம் பயன்படுத்துவோர் குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்தியாவில்,
பெண்களே அதிகமாக இணையத்தினைப் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை வளர்ச்சியில், பெண்கள் 30% உள்ளனர். ஆண்கள் 25% உள்ளனர். Internet and Mobile Association of India மற்றும் Internet Market Research Bureau ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டன.

மும்பையில் தான் அதிக எண்ணிக்கையில் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி வேகம் சென்னையில் தான் மிகக் குறைவாக உள்ளது. இணையம் பயன்படுத்தும் 35 நகரத்துப் பெண்களில், 62% பெண்கள் கல்லூரி செல்பவர்களாகவும். 34% பேர் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளாகவும் உள்ளனர். எனவே, இந்த கண்டுபிடிப்பு, ஆண்கள் தான் இணையத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் என்ற மாயையை நீக்கிவிட்டது. 

இது குறித்து IAMAI துணைத் தலைவர் சக்ரவர்த்தி குறிப்பிடுகையில், ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரிப்பதே இதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது என்றார். குறைவான வருமானம் உள்ள பெண்கள் கூட, குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு வரவேற்கத்தக்க வளர்ச்சி சார்ந்த அம்சமாகும். இணையப் பயன்பாடு தொடங்கியபோது, அது மின் அஞ்சல்களைப் பார்ப்பதற்கும், அதற்கு பதில் அளிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. 

ஆனால், இன்றைய பெண்கள், இணையத்தில் கிடைக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் குறித்து அறிய ஆவலுடன், இணையத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு, ஸ்மார்ட் போன்கள், இணையம் பயன்படுத்த நல்லதொரு வாய்ப்பைத் தருகின்றன. குறிப்பாக, இளம் வயது பெண்கள், ஸ்மார்ட் போன்களை மட்டுமே பயன்படுத்துபவர்களாக உள்ளனர். 

இந்த ஆய்வில், மும்பை 1.6 கோடி பேர்களுடனும், டில்லி 1.2 கோடி பேர்களுடனும் முதல் இரண்டு இடத்தைப் பிடித்துள்ளன. சென்னை 55 லட்சம் பேர்களைக் கொண்டுள்ளது. புனேயில், அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளதால், அது சென்னைக்கும் முன்னதாக 34% வளர்ச்சியுடன் உள்ளது. பெங்களூரு 36% வளர்ச்சியையும், ஹைதராபாத் 34 சதவீதமும் கொண்டு உள்ளன.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget