மாம்பழ சீஸ் கேக்

தேவையான பொருட்கள்

கரடு முரடாக தூள் செய்த டைஜெஸ்டிவ் பிஸ்கட் -2பாக்கெட்
உருக்கிய வெண்ணெய்- 1/3 கப்
தூள் செய்த சர்க்கரை-1கப்(மாம்பழத்தின் இனிப்பு இல்லை எனில் சேர்த்துக்கொள்ளவும்.)
கெட்டியான தயிர் -3 கப்
பன்னீர் க்யூப்ஸ்-2 கப்
தண்ணீர்-1 3/4 கப்

சீனா புல் - 10 கிராம்
மாம்பழம் மசித்தது-2

மாம்பழ க்ளேஸ் செய்ய தேவையான பொருட்கள்

மாம்பழ கூழ்  1/2 கப்
தண்ணீர்  2 டீஸ்பூன்
சர்க்கரை  2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு  1 டீஸ்பூன்

செய்முறை

கரடுமுரடாக தூள் செய்த பிஸ்கட் கலவையை எடுத்துக்கொள்ளவும். தூள் செய்து வைத்துள்ள பிஸ்கட் மீது உருக்கி வைத்துள்ள வெண்ணெய்யை  சேர்த்து கலக்கவும். (கையை பயன்படுத்தியும் அல்லது கரண்டியை பயன்படுத்தியும் கிளறலாம்). இந்தக் கலவையை தம்ளர் அல்லது கப்பை  பயன்படுத்தி கேக் மாதிரி உறுதியான முறையில் அதை அழுத்தி 15 நிமிடங்கள் ப்ரீசரில் வைக்கவும். ஒரு மெல்லியதான துணியில் தயிரை கொட்டி  இரண்டு மணி நேரம் தொங்க விடவும். அவ்வாறு செய்தால் தயிரில் உள்ள தண்ணீர் வெளியாகி கெட்டியான தயிர் நமக்கு கிடைக்கும். 

ஒரு சிறிய  கப்பில் பன்னீரை வெட்டி வைத்துக்கொள்ளவும். தொங்கவிடப்பட்டுள்ள தயிர் மற்றும் பன்னீரை சேர்த்து கூழ் ஒன்றை தயார் செய்து  வைக்கவும். பின்னர் மசித்து வைத்துள்ள மாம்பழத்தை கடாயில் கொட்டி கொதிக்க விடாமல் கிளறவும். அதனுடன் பன்னீர், தயிர் சேர்த்து கலந்து  வைத்துள்ள கலவை, சீனா புற்கள், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து அடித்து க்ரீம் வரும் வரை கிளறவும். 

பின்னர் ப்ரிசரில் வைத்துள்ள கலவையை எடுத்து அதன் மேல் க்ரீமை தடவி விடவும். பின்பு 3 நிமிடம் குளிர்பதன பெட்டியில் வைக்கவும். ஒரு  கடாயில் மாம்பழ கூழ் தண்ணீர், சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து நடுத்தர வெப்பத்தில் வைத்து சாஸ் மாதிரி தயாரித்துக்கொள்ளவும். குளிர்பதன  பெட்டியில் வைத்துள்ள கலவையை எடுத்து அதன் மேல் சாஸ் கலவையை தேயத்து அலங்கரித்து பரிமாலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget