தேவையான பொருட்கள்
மைதா மாவு - 1 கப்,
வாழைப் பழம் - 1,
பேக்கிங் பவுடர், சமையல் சோடா - தலா அரை டீஸ்பூன்,
வால்நட்ஸ் - கால் கப்,
பொடித்த சர்க்கரை - கால் கப்,
பிரவுன் சுகர் - 1 டேபிள் ஸ்பூன் (பெரிய கடைகளில் கிடைக்கும்),
பால் - அரை கப்,
வெண்ணிலா எசென்ஸ் - கால் டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
உருக்கிய வெண்ணெய் - அரை கப்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை
மைதா மாவுடன் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து மூன்று முறை நன்றாக சலிக்கவும். வெண்ணெய் மற்றும் இரண்டுவித சர்க்கரையையும் சேர்த்து பொங்கி வரும் வரை ஒரே பக்கமாய் கலக்கி அடிக்கவும். இத்துடன் சலித்த மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். இது நன்றாக கலந்து வரும்போது வாழைப்பழத்தை குழைத்து கலவையில் சேர்க்கவும். இத்துடன் எண்ணெய், பால், எசென்ஸ் சேர்க்கவும். ஏலக்காய், வால் நட்ஸை உடைத்து சிறிது மைதா தூவி கலந்து கேக் கலவையில் சேர்த்து வெண்ணெய் தடவிய கேக் ட்ரேயில் கொட்டி பேக் செய்து எடுக்கவும். வால் நட்ஸ் கொண்டு அலங்கரிக்கவும்.

கருத்துரையிடுக